வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கிவிட்டு வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை: மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை : மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
2022-04-28@ 01:15:35

வேலூர்: வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவரும் அதே கடையில் வேலை பார்க்கும் காட்பாடியை சேர்ந்த வாலிபரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 ஜனவரி 18ம் தேதி இரவு இருவரும் கோட்டை பூங்காவிற்கு சென்று, அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது 3 பேர், காதலனை சரமாரி தாக்கிவிட்டு, கத்தியை காட்டி மிரட்டி காதலனின் கண் முன்னே இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரின்படி வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன்(43), வசந்தபுரத்தை சேர்ந்த கோழி என்கிற சக்திவேல்(21), தொரப்பாடியை சேர்ந்த கொய்யாமாரி என்கிற மாரிமுத்து(31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கை வேலூர் மகிளா கோர்ட் மாஜிஸ்திரேட் கலைப்பொன்னி விசாரித்து மூவரும் குற்றவாளிகள் என நேற்று முன்தினம் அறிவித்து, மறுநாள் தண்டனை விவரம் தெரிவிப்பதாக கூறினார். அதன்படி மணிகண்டன், சக்திவேல் ஆகிய 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தும், மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தும் மாஜிஸ்திரேட் நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
தொடர் மழை எதிரொலி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணைகளை கடந்து செல்கிறது
வால்பாறை நகர மக்கள் தாகம் தணிக்க ரூ.4 கோடியில் மூன்றாம் குடிநீர் திட்டம்; நகராட்சி அதிகாரிகள் தீவிரம்
திமுக ஆட்சியால் மீண்டும் புத்துயிர் பெறுகிறது... காரியாபட்டியில் உருமாறும் உழவர் சந்தை
கரூர் புகழிமலையில் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்... கிமு 1ம் நூற்றாண்டிலேயே பள்ளிக்கூடம் நடத்திய சமணர்கள்
விராலிமலை பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி ஓடைகுளத்தை தூர் வார வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!