விருத்தாசலம் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு
2022-04-27@ 16:41:37

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது கிருஷ்ணர் உலோக சிலை கிடைத்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் (65), விவசாயி. இவர் நேற்று தனது கூரை வீட்டின் அருகில், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டியுள்ளார். அப்போது சுமார் 3 அடி ஆழத்தில் ஏதோ ஒரு பொருள் கடப்பாரையில் தட்டுப்பட்டுள்ளது. தொடர்ந்து தோண்டி எடுத்து பார்த்தபோது, அதில் செம்பு உலோகத்திலான 10 வளையல்கள் மற்றும் கிருஷ்ணர் உலோக சிலை ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த ரத்தினம், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
போலீசார் விரைந்து சென்று, சிலை மற்றும் உலோக பொருட்களை கைப்பற்றி திட்டக்குடி வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்ற வருவாய் துறையினர், கடலூர் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திட்டக்குடி வருவாய் துறையினர் கூறுகையில், ‘சிலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, இது எந்தவிதமான உலோகத்தால் செய்யப்பட்டவை, எத்தனை வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்டவை, இதனுடைய மதிப்பு மற்றும் இந்த பகுதியில் பூமிக்கு அடியில் புதைந்தது எப்படி என்ற வரலாறு குறித்து விசாரணை செய்யப்பட உள்ளது. இதன் பின்புதான் இந்த சிலையின் முழு விவரம் தெரியும் என்றனர்.
மேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!