திருப்பூரில் கிணற்றில் குதித்து 10ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் தற்கொலை
2022-04-26@ 14:32:19

திருப்பூர்: திருப்பூரில் 10ம் வகுப்பு மாணவியுடன் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கைகாட்டி புதூரை சேர்ந்தவர் முரளி மகன் அஜய் (23). பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரை, அஜய், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதை சிறுமியின் தாயாருக்கு தெரியவர, திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் சிறுமி, காதலன் அஜய்யுடன் நேற்று முன்தினம் இரவு மாயமானார். நீண்ட நேரம் சிறுமியை காணாததால் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் ஆத்துப்பாளையம் செல்லும் ரோட்டில் கிருஷ்ணவீணா நகர் அருகில் தனியார் கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரித்தனர். இறந்தது மாயமான அவிநாசி கைகாட்டி பகுதியை சேர்ந்த சிறுமி என்பது தெரியவந்தது. மேலும் அந்த கிணற்றில் தேடியபோது அஜய்யின் உடலும் மீட்கப்பட்டது. 2 உடல்களையும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நேற்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில் இருவரும் வருவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இரு சக்கர வாகனத்தை கிணறு இருக்கும் பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இறந்துபோன சிறுமி ஜெர்கின் அணிந்திருந்ததால் அவரின் உடல் முதலில் தண்ணீரில் மிதந்தது. பின்னர்தான் அஜய் உடலை தேட முடிந்தது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டோம். அஜய் உடலை நாளை (இன்று) பிரேத பரிசோதனை செய்ய உள்ளார்கள்’ என்றனர்.
மேலும் செய்திகள்
48 நாட்கள் நடைபெற்ற அமர்நாத் யாத்திரை நிறைவு
மசினகுடி - கூடலூர் இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்
தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது
ஆக-12: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
கொரோனாவுக்கு உலக அளவில் 6,447,831 பேர் பலி
கருப்பு சட்டை அணிந்த பெரியார் மக்களின் நம்பிக்கையை பெற்றார்: மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் காந்தி அறிவிப்பு
கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்
வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com, 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது: கல்லூரிக் கல்வி இயக்கம்
ஊட்டி அருகே கனமழை காரணமாக கான்க்ரீட் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சேதம்
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற அவதூறு வழக்கு: கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!