இந்து சமய அறநிலையத்துறையின் செயல்படுகள் மிகவும் வரவேற்புக்குரியது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் பாராட்டு
2022-04-25@ 17:51:32

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் செயல்படுகள் மிகவும் வரவேற்புக்குரியது என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று 25.04.2022 நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் ரூ. 15 கோடி செலவில் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி திருக்கோயில்களில் பணிபுரியும் தினக்கூலி/தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 33 நபர்களுக்கு பணி வரன்முறை செய்து அதன் ஆணையை தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தவத்திருகுன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியதாவது, இந்து சமய அறநிலையத்துறையின் புதிய கட்டடம் கால்கோள் இடப்பட்டது. இத்துறை வரலாற்றிலே பெரிய சாதனை ஆகும். ஏறத்தாழ 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு, புதிய கட்டடம் இல்லாமல் செயல்பட்டு வந்த இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் 40 ஆயிரம் சதுடியில் நவீன வசதிகளோடு தகவல் தொடர்புடைய ஆணையர் அலுவலகம் உருவாவது,,வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் பேசும்போது தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று ஓராண்டிலே பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது, மகிழ்ச்சிக்குரியதாக இருக்கின்றது. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம், மாற்று திறனாளிகளுக்கு இலவச திருமண திட்டம், ஓதுவார்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, 5 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு நிரந்திர அடிப்படையில் கால நிர்ணயம் செய்து ஊதியம் வழங்கி 1500 க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கியிருப்பது மகிழ்விற்குரியது என்று கூறினார்கள்.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்