கொளுத்தும் வெயிலால் குவியும் கூட்டம் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
2022-04-25@ 12:46:11

தென்காசி : குற்றாலத்தில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பழைய குற்றால அருவியில் மிதமான தண்ணீா் கொட்டுகிறது. தற்போது கோடை காலமாக இருந்த போதும் கடந்த சில தினங்களாக மாலை வேளைகளில் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் சற்று தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்தில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது.
மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும், பெண்கள் பகுதியில் மிகவும் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. கோடைகாலத்தில் தண்ணீர் விழுவதாலும், விடுமுறை தினம் என்பதாலும் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பெண்கள் பகுதியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் ஆண்கள் பகுதியிலேயே சிறிது நேரம் பெண்களும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பழைய குற்றாலத்தில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுந்ததால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் நோக்கி படையெடுத்துச் சென்றனர்.
இதற்கிடையே இன்று 25ம் தேதி முதல் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மாலை 6 மணிக்கு மேல் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது. அதேசமயம் பழைய குற்றாலத்தில் தடை தொடர்ந்து நீடிக்கிறது. தற்போதைய சூழலில் பழைய குற்றாலத்தில் மட்டுமே ஓரளவு தண்ணீர் நன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’
பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்
1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!