பெரம்பலூர் அருகே சென்டர்மீடியனில் மோதி கார் கவிழ்ந்து அரசு அதிகாரி மனைவி, மாமியார் பலி: சென்னை வந்தபோது பரிதாபம்
2022-04-25@ 04:50:12

பெரம்பலூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (42). திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதா (40). இவர் வாலிபால் பயிற்சியாளராக இருந்தார். இவர்கள், லதாவின் தாயார், திருவாரூர் மாவட்டம், இடை மேலையூரை சேர்ந்த செளந்தர்ராஜன் மனைவி வேம்பு (64). லதாவின் அண்ணன் ராமச்சந்திரன் (44), கமலக்கண்ணனின் சித்தி கோவையை சேர்ந்த மணிமேகலை (65) ஆகியோருடன் திண்டுக்கல்லில் இருந்து, சென்னை அருகே சீரடி சாய்பாபா கோயிலுக்கு சாமி கும்பிட செல்வதற்காக, நேற்று முன்தினம் நள்ளிரவு டாடா சபாரி காரில் புறப்பட்டனர்.
காரை கமலக்கண்ணன் ஓட்டினார். நேற்று அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகே விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் சென்றபோது, கமலக்கண்ணனின் கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடி, சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் கமலக்கண்ணன், அவரது மனைவி லதா, லதாவின் தாய் வேம்பு ஆகிய மூவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள். உயிருக்கு போராடிய ராமச்சந்திரன், மணிமேகலை ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 34-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டம்!
தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நெல்லை கண்ணன் மறைவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல்..!
ஆவடி தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி: முன்னேற்பாடுகள் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...