கோவை மாவட்டத்தில் கொப்பரை கிலோவிற்கு ரூ.105.90 நிர்ணயம்
2022-04-24@ 11:22:10

கோவை: 2022 ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலை திட்டம் மூலம் கோவை மாவட்டத்தில் செஞ்சேரி, பொள்ளாச்சி மற்றும் நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஜனவரி முதல் ஜூன் வரை கொப்பரை கொள்முதல் நடைபெற்று வருகிறது. தற்போது வெளி சந்தையில் கொப்பரை விலை குறைவாக உள்ள நிலையில், அரசு கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரை கிலோவிற்கு ரூ.105.90 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நன்கு உலரவைத்த தரமுள்ள கொப்பரையை விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரலாம். விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் ஆகிய ஆவணங்களை செஞ்சேரி, பொள்ளாச்சி மற்றும் நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சமர்ப்பித்து கொள்முதலுக்கு பதிவு செய்ய வேண்டும்.
அதற்கான தொடர்பு அலுவலர்கள் விவரம்: பொள்ளாச்சி: சூர்யா, வேளாண்மை அலுவலர், பொள்ளாச்சி கோட்டம் (செல்- 9003454009), குமார், உதவி வேளாண்மை அலுவலர், பொள்ளாச்சி தெற்கு வட்டாரம் - (9443184907), ஜெயராமகிருஷ்ணன், கண்காணிப்பாளர், பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - (9626047530). நெகமம் : சூர்யா, வேளாண்மை அலுவலர், பொள்ளாச்சி கோட்டம் - (9003454009), சுந்தரராஜன், உதவி வேளாண்மை அலுவலர், பொள்ளாச்சி வடக்கு வட்டாரம் - (6380453030), வாணி, கண்காணிப்பாளர், நெகமம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - (9894687827). செஞ்சேரி: சூர்யா, வேளாண்மை அலுவலர், பொள்ளாச்சி கோட்டம் - (9003454009), மகாலிங்கம், உதவி வேளாண்மை அலுவலர், சுல்தான்பேட்டை வட்டாரம் - (9791868407), இஷாக், கண்காணிப்பாளர், செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - (9360087561). இந்த தகவலை கோவையில் உள்ள வேளாண் விற்பனை வாரிய தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர்; அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!