புகார் அளிக்க வரும் தாய்மார்களின் வசதிக்காக சென்னையில் 8 இடங்களில் பாலூட்டும் அறை: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
2022-04-24@ 00:24:44

சென்னை: புகார் அளிக்க வரும் பாலூட்டும் தாய்மார்களின் வசதிக்காக முதல்கட்டமாக சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்பட 8 இடங்களில் பாலூட்டும் அறையை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று துவக்கி வைத்தார். பாலூட்டும் தாய்மார்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது, அவர்களின் குழந்தைகளுக்கு பாலூட்ட இடம் இல்லாமல் அவதிப்படுவதை போக்கும் வகையில் சென்னை காவல்துறை மற்றும் ஜஸ்டீஸ் மிஷன் இணைந்து தாய்மார்கள் பாலூட்டும் அறையை நிறுவ திட்டமிட்டன.
அதன்படி முதற்கட்டமாக காவல் ஆணையர் அலுவலகம், ஆயிரம்விளக்கு காவல் நிலையம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, வடபழனி முருகன் கோயில், பெசன்ட் நகர் மாதா ஆலயம் உள்பட 8 இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் ஜஸ்டிஸ் மிஷன் தொண்டு நிறுவன நிர்வாகி சினேகா ஆகியோர் பாலூட்டும் அறையை துவக்கி வைத்தனர். பின்னர், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க கைக்குழந்தையுடன் பாலூட்டும் தாய்மார்கள் பெருமளவில் வருகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக முதற்கட்டமாக 8 இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை துவக்கி வைத்திருக்கிறோம். வரவேற்பை பொறுத்து மேலும் சில இடங்களில் நிறுவ இருக்கிறோம்’’ என்றார்.
Tags:
Complaint Mothers Chennai Breastfeeding Room Police Commissioner Shankar Jiwal புகார் தாய்மார் சென்னை பாலூட்டும் அறை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்மேலும் செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது!: எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த டிடிவி தினகரன்..!!
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்ளிங் லீக் ஆக.27ல் தொடக்கம்
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் செப். 12ம் தேதி தொடங்குகிறது
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!