வன தலைமை அலுவலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு?... வேளச்சேரி வனத்துறை கட்டிடத்தில் விதிமீறல் குற்றச்சாட்டு
2022-04-23@ 18:05:59

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள காப்புக்காட்டில் வன துறையின் எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் அந்த துறைக்கான தலைமை அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிண்டி தேசிய பூங்காவை ஒட்டியுள்ள வேளச்சேரி காப்புக்காட்டில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2019-21 கால கட்டத்தில் இந்த பிரம்மாண்டமான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 30 கோடி ரூபாய் அளவில் கட்டப்பட்ட இந்த 5 அடுக்கு கட்டிடம் 21471 சதுர ஆடி பரப்பளவு கொண்டது. தமிழ்நாடு வனத்துறைக்கான இந்த தலைமை கட்டிடம் குறைந்தபட்சம் வனத்துறையின் விதிகளை கூட பின்பற்றாமல் கட்டப்பட்டது தெரிய வந்துள்ளது. மாவட்ட வன அலுவலரின் அனுமதி கூட பெறவில்லை என்றும் town and country planning சட்டத்தின் கீழும் அனுமதி பெறவில்லை என வன மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வனத்துறை தலைமை அலுவலக கட்டிடத்தில் சுத்திகரிக்கப்படாமல் கிண்டி தேசிய பூங்கா இல்லத்தில் கழிவு நீர் பூங்கா வெளியேற்றப்படுவதாகவும் புகார் உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த கட்டிடம் கட்டிய வனத்துறையினரின் விளக்கம் போதுமானதாக இல்லை எனில் அதை இடிப்பதே நியாயமான நடவடிக்கை என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனிடையே இதற்கு ரூ.7 கோடி அளவுக்கு தேவையற்ற செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாகும்.
மேலும் செய்திகள்
கோவளம் ஒருங்கிணைந்த வடிகால் திட்டத்துக்கு ஆணையம் அனுமதி
சென்னையில் உள்ள ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலம்; அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
இந்தாண்டு சிறப்பு தணிக்கை மூலம் அரசுக்கு ரூ.158 கோடி வருவாய்; ஜிஎஸ்டி மண்டல தலைமை ஆணையர் தகவல்
மண்டல வருமான வரித்துறையில் ரூ.1 லட்சம் கோடி வரி வசூல்; தலைமை ஆணையர் பேச்சு
நடப்பு ஆண்டில் ஐசிஎப் சார்பில் 3,500 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்; பொது மேலாளர் தகவல்
6 வருடங்களுக்கு பிறகு ரிப்பன் மாளிகையில் தேசிய கொடி ஏற்றம்; மேயர் பிரியா தலைமையில் நடந்தது
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!