லால்குடியில் பதுக்கி வைத்திருந்த 514 மூட்டை ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்: மில் உரிமையாளர் தப்பி ஓட்டம்
2022-04-21@ 16:30:53

லால்குடி: லால்குடியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 514 ரேசன் அரிசி மூட்டைகள் சிக்கியது மில் உரிமையாளர் தப்பி ஓடி விட்டார்.திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக லால்குடியில் இருந்து மாவட்ட வழங்கல் அதிகாரி இளவரசியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் உத்தரவின் பேரில் லால்குடி வட்ட வழங்கல் அதிகாரி விஜய், அபிஷேகபுரம் கிராம நிர்வாக உதவியாளர் அரிகிருஷ்ணன் மற்றும் லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோருடன் லால்குடி தேரடி வீதி தேரடி பகுதியில் அமைந்துள்ள மதி டிரேடர்ஸ்க்கு சொந்தமான கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் கடத்தி செல்வதற்காக லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதில் 230 ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, குடோனில் அடைத்து பதுக்கிவைக்கப்பட்டிருந்த 314 ரேஷன் அரிசி மூட்டைகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் ஒரு மூட்டை கோதுமை உள்பட 515 மூட்டைகள் அரிசி கடத்தலுக்கு பயன் படுத்திய லாரியையும் கைப்பற்றினர். அதிகாரிகள் தொடர்ந்த நடந்த சோதனையில் தலைமறைவான அரிசி மில் மற்றும் கடையை நடத்தி வந்த லால்குடி தேரடி வீதி மதியழகன் செட்டியார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!