‘எனது விரல் கூட தொடாத நிலையில் குழந்தை பிறந்துள்ளது’ திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு: ராணிப்பேட்டை எஸ்பியிடம் கணவர் ‘பகீர்’ புகார்
2022-04-20@ 14:48:39

ராணிப்பேட்டை: திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளதாக ராணிப்பேட்டை எஸ்பியிடம் கணவர் புகார் அளித்துள்ளார். ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் புளியந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (28). இவர் நேற்று எஸ்பி தீபாசத்யனிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை ஆசிரியர் காலனியில் வசிப்பவர் சசிகுமார். சிஎஸ்ஐ ஆயராக உள்ளார். இவரது உறவினர், சென்னை கோயம்பேடு மண்டி தெருவை சேர்ந்த கனிமொழி.
இவருக்கும் எனக்கும் கடந்த 4.12.2019 அன்று திருமணம் நடந்தது. எங்களுக்கு சிஎஸ்ஐ ஆயர் சசிகுமார், திருமணத்தை நடத்தி வைத்தார். நர்சிங் படித்துள்ள எனது மனைவி, சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் எனது மனைவி என்னிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, ஆயர் சசிகுமாருடன் அடிக்கடி காரில் சென்று விடுவார். வீட்டிற்கு வந்தபிறகும் அவர் ஆயருடன் பல மணிநேரம் செல்போனில் பேசுவார். என்னுடன் இல்லற வாழ்வில் ஈடுபடுவதை தவிர்த்து வந்தார்.
அவரை தொட முயற்சித்தாலும் என்னை தாக்கி விரட்டுவார். கடந்த 2020, ஜனவரி 14, 15, 16ம் தேதிகளில் முகாம் பணிக்கு போகவேண்டும் எனக்கூறிவிட்டு ஆயருடன் வெளியே சென்று தங்கினார். இதையறிந்த நான் எனது மனைவியிடம் கேட்டபோது, ‘திருமணத்திற்கு முன்பே அவருடன் உறவில் இருந்தேன். இனி நான் துண்டித்து கொள்கிறேன்’ என்று எனது மனைவி கூறினார். ஆனால் துண்டித்து கொள்ளவில்லை. இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனது கை விரல் கூட படாத நிலையில், கடந்த 13.10.20 அன்று எனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து கேட்டபோது, குழந்தைக்கு தந்தை ஆயர்தான் என்கிறார்.
இதை போலீசில் கூறினால், வரதட்சணை கேட்பதாக உன் மீதும், உன் பெற்றோர் மீதும் புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன் என்று மனைவி மிரட்டுகிறார். இதனால் மனவேதனை அடைந்த நான், விவாகரத்து கோரி வேலூர் முதன்மை நீதிமன்றத்தில் மனு கொடுத்தேன். இதனால் என்னையும் என் குடும்பத்தினரையும் ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே ஆயர் மற்றும் எனது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இம்மனுவை பெற்ற எஸ்பி தீபாசத்யன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்
போலி கன்டெய்னர் கம்பெனிகள் தொடங்கி ரூ.50 கோடி மோசடி, வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கைது; மும்பை விமான நிலையத்தில் தனிப்படை அதிரடி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!