ரூ.1 லட்சம் பெட்ரோல் கடத்தி கடலோர கட்டிடத்தில் பதுக்கல்: வாலிபர் கைது-காரைக்கால் அருகே பரபரப்பு
2022-04-20@ 14:10:07

காரைக்கால் : காரைக்கால் அருகே மீனவ கிராம கடற்கரையில் பெட்ரோலை கடத்தி, பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1,005 லிட்டர் பெட்ரோலைப் பறிமுதல் செய்தனர்.கோட்டுச்சேரி காவல் நிலைய எஸ்ஐ., செந்தில்குமார், சிறப்பு அதிரடிப்படை எஸ்ஐ., பிரவீன்குமார் மற்றும் போலீசார் கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழகாசாகுடிமேடு கடற்கரை பகுதியில் சிலரது நடமாட்டம் தெரிந்தது.
அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற வாலிபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குறிப்பிட்ட வாலிபர் கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் முத்தீஸ்(30) என்பது தெரிய வந்தது. காரைக்கால்மேடு மற்றும் கோட்டுச்சேரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் கேன்களில் பெட்ரோலை வாங்கி கடற்கரைப்பகுதிக்கு கடத்தி மணலில் புதைத்து வைத்துள்ளார்.
அந்த பெட்ரோலை கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது. கீழகாசாக்குடி கடற்கரைப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அங்கு கட்டிடத்தின் அரை ஒன்றில் பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1,005 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர். பரிமுதல் செய்யப்பட்ட பெட்ரோலை உணவு பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், இலங்கையில் தற்போது நிலவும் விலைவாசி, அசாதாரண அரசியல் சூழலில் கடல் வழியே பெட்ரோல் கடத்தப்படுகிறதா என்றும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே காரைக்காலில் சில வருடங்களுக்கு முன் இலங்கைத் தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்ல தயாரான படகு காரைக்காலில் பிடிபட்டது. படகுக்கான டீசலை பதுக்கி வைத்திருந்ததாக சிலரை போலீசார் கைது செய்தனர். உரிமை கூறப்படாத அந்தப் படகு இன்னும் காரைக்கால் கடற்கரை சாலையை ஒட்டிய அரசலாற்றில் தரைதட்டி மூழ்கிய நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
சர்ச்சுக்கு வந்த சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை: பாதிரியார் கைது
அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
பல்லடத்தில் நள்ளிரவு துணிகரம்: ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுக்க முயன்ற கொள்ளையர்
தனியார் வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளை கும்பல் தலைவன் முருகன் அதிரடியாக கைது; 32 மணி நேரத்தில் 4 பேர் கைது: 18 கிலோ தங்க நகைகள் மீட்பு
ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேச்சு; சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: போலீசுக்கு பயந்து 13 நாள் புதுச்சேரியில் பதுங்கல்
அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை நடந்த 72 மணி நேரத்தில் 4 குற்றவாளிகளை கைது செய்து போலீஸ் அதிரடி..!
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!