மாடு அறுவைமனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாட்டுடன் வந்து வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
2022-04-19@ 12:42:10

கோவை: கோவையில் மாடு அறுவை மனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாட்டுடன் வந்து வியாபாரிகள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாநகர்-மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் இஸ்மாயில் தலைமையில் வந்த 10க்கும் மேற்பட்டவர்கள் மாட்டுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை சத்தி ரோடு மற்றும் செட்டிபாளையம் மெயின் ரோட்டில் மாடு அறுவை மனைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த மனையை ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் எடுத்தவர்கள் அரசு நிர்ணயம் செய்த மாடு அறுவை கட்டணம் ரூ.10 வசூலிக்காமல், சத்தி ரோட்டில் உள்ள அறுவை மனையில் சிறிய காளைக்கு ரூ.150ம், பெரிய காளைக்கு ரூ.500ம் வசூல் செய்கின்றனர். செட்டிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள அறுவை மனையில் சிறிய காளைக்கு ரூ. 150ம், பெரிய காளைக்கு ரூ.300ம் வசூலிக்கிறார்கள். இதனால் நாங்கள் நஷ்டத்திற்கு உள்ளாகிறோம். எனவே இந்த அறுவை மனைகளை அரசே எடுத்து நடத்தி அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகளோடு திறனாய்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவு பணிச்சுமையால் திண்டாடும் உடற்கல்வி ஆசிரியர்கள்: காலியிடங்கள் நிரப்பப்படுமா?
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது: 26ம் தேதி தேரோட்டம்
சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா: 150 வகை நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
ஊரக வளர்ச்சித்துறை பட்டியல் தயாரிப்பு: 99 ஓவர்சியர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவனிடம் விசாரிக்க விஜிலென்ஸ் போலீசார் முடிவு: வெளிநாட்டில் முதலீடு மற்றும் ஹார்டு டிஸ்க் ஆய்வு முடிந்தது
தூத்துக்குடி துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!