திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: இன்று மாலை நடக்கிறது
2022-04-19@ 04:45:53

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (19ம் தேதி) மாலை 5 மணியளவில் கும்மிடிப்பூண்டி ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஏவிஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, க.சுந்தரம், இ.ஏ.பி.சிவாஜி, சி.எச்.சேகர், ஜெ.மூர்த்தி, டி.வி.தமிழன் இளங்கோவன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மு.பகலவன், கேவிஜி.உமாமகேஸ்வரி, மு.கதிரவன், டாக்டர் பரிமளம், ஏ.நிலவழகன், மீ.வீ.கோதண்டன், எம்.எல்.ரவி, ப.வெங்கடாஜலபதி, வெ.அன்புவாணன், கே.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.சுப்பிரமணி, பா.செ.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி, அபிராமி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள திமுக 15வது உட்கட்சி தேர்தல் பணிகள் குறித்து தலைமை கழக பிரதிநிதிகள் உ.மதிவாணன், ஈரோடு இறைவன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது!: எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்த டிடிவி தினகரன்..!!
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்ளிங் லீக் ஆக.27ல் தொடக்கம்
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் செப். 12ம் தேதி தொடங்குகிறது
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!