அயோத்தியா மண்டபம் விவகாரம் சமூக ஆர்வலர் ரமணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: மாநகர காவல்துறை நடவடிக்கை
2022-04-16@ 01:55:37

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தை ராம சமாஜம் அமைப்பு நிர்வகித்து வந்துள்ளது. 2004ம் ஆண்டு ஆஞ்சநேயர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி உண்டியலில் காணிக்கை வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மேற்கு மாம்பலம் சுப்ரமணியன் தெருவை சேர்ந்த ரமணி (68) என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து தற்போது இந்து அறநிலையத்துறை அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றியது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் பாஜவினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநகராட்சி பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேரை கைது செய்தனர். இந்நிலையில், அயோத்தியா மண்டபத்தை நிர்வகித்து வந்த ராம சமாஜம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன், உதவி செயலாளர் ராமதாஸ் மற்றும் சங்க உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் சமூக ஆர்வலர் ரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரமணி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்று அளித்தார்.
அந்த புகார் மனுவை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி நேற்று காலை முதல் அயோத்தியா மண்டபம் தொடர்பாக புகார் அளித்த சமூக ஆர்வலர் ரமணிக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர் ஒருவர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரமணிக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்
போலி கன்டெய்னர் கம்பெனிகள் தொடங்கி ரூ.50 கோடி மோசடி, வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கைது; மும்பை விமான நிலையத்தில் தனிப்படை அதிரடி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!