கான்டக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி : வாட்ஸ் அப் செயலியில் கூடுதல் அப்டேட்டுகள் என்னென்ன ?
2022-04-15@ 08:57:39

சென்னை : இன்று உலக அளவில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவி வருகிறது சமூக வலைதள செயலியான வாட்ஸ்-அப். மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் மேற்கொள்ளலாம். சமயங்களில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் இதில் அனுப்பிக் கொள்வதுண்டு. இருந்தாலும் அந்த ஃபைல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதன் காரணமாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்பவுதுண்டு. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்ப முடியும் அளவிற்கு வாட்ஸ அப் செயலி மேம்படுத்தப்படுகிறது.
மேலும் வாட்ஸ் அப் செயலியில் இடம்பெற்ற உள்ள கூடுதல் அப்டேட்டுகளை பார்க்கலாம்!!
அறிமுகம் இல்லாதவரின் மொபைல் எண்ணை சேவ் செய்யாமலேயே அந்த நபருக்கு டைரக்ட் மெசேஜ் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகிறது.
ரியாக்சனை வெளிப்படுத்த, பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போன்று எமோஜி அறிமுகமாகிறது.
வாட்ஸ் அப் குரூப்பில் எந்த நபரும் பதிவிடும் தகவலை, அதன் அட்மின் நீக்குவதற்கான வசதி அறிமுகமாகிறது.
வாட்ஸ் அப் குரூப் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பங்கேற்கும் வசதியும் வர உள்ளது.
பல வாட்ஸ் அப் குரூப்களை கையாளும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
மேலும் செய்திகள்
28 கோடி வண்டிஓடுது..
பியன் அபார்த் புன்டோ: பழசுக்கு மவுசு
ஹோண்டா டியோ லிமிடெட் எடிஷன் பைக்குகள்
எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தி இந்தியாவிலும் இனி சாத்தியம்
மிக நீளமான வால்வோ சொகுசு பஸ்
யமஹா மோட்டோ ஜிபி எடிஷன் பைக்குகள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!