பி.பி.புரம் கிராமத்தில் வெங்கடேஸ்வர கோயில் கும்பாபிஷேகம்
2022-04-15@ 00:07:12

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த செட்டிவாரிபள்ளி பி.பி.புரம் கிராமத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கலை நுட்பத்துடன் கட்டப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி, கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோம பூஜைகள் நடைபெற்றது. 3ம் நாளான நேற்று காலை மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு குவிந்தனர். மஹா பூர்ணாஹுதி ஹோம பூஜைகள் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்களை புறப்பாடு நடைபெற்றது. பின்னர், கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கோயில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனறு பக்தி பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Tags:
BP Puram Village Venkateswara Temple Kumbabhishekam பி.பி.புரம் கிராம வெங்கடேஸ்வர கோயில் கும்பாபிஷேகம்மேலும் செய்திகள்
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர்; அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!