SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!

2022-04-12@ 09:38:59

வாஷிங்டன் :  நிலவில் மனிதர்களை குடியேற்ற ஆய்வாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், அங்கு 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் சிலிக்கா, அலுமினியம், மேக்னிஷியம் ஆக்சைடுகள், இரும்பு போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளதாகவும் இந்த தாதுக்கள் அனைத்தும் ஆக்சிஜனை உள்ளடக்கியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரிகோலித் எனப்படும் நிலவின் மேற்பரப்பில் 1.4 டன் கனிமங்கள் உள்ளன.

இதில் 1 கன மீட்டருக்கு சுமார் 630 கிமீ ஆக்சிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாசாவின் கூற்றுப்படி ஒருவர் ஒரு நாளைக்கு சுவாசிக்க சுமார் 800 கிராம் ஆக்சிஜன் தேவை. அதன்படி பார்த்தால் நிலவில் உள்ள ஆக்சிஜன் மூலம் அங்கு மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு வாழலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு ஆகும். 

Like Us on Facebook Dinkaran Daily News
  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்