மாநெல்லூரில் ரத்ததான முகாம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு
2022-04-12@ 00:41:54

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ரத்த தான முகாம் நடந்தது. இதில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூரில் தனியார் அறக்கட்டளையின் 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் துணை வட்டாட்சியர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ், மாவட்ட கவுன்சிலர் சாரதாம்மா முத்துசாமி, மாதர்பாக்கம் மனோகரன், அறக்கட்டளை நிர்வாகிகள் யுவராஜ், ரைப்பட நடிகர் சம்பத்ராம், ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்று, ரத்த தான முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் நிறைமதி தலைமையில் மருத்துவ குழுவினர் பங்கேற்று, ரத்த தானம் தர வந்தவர்களை பரிசோதித்து ரத்தம் சேகரித்தனர். இதில் 146 பேர் ரத்த தானம் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Tags:
In Manelloor Blood Camp DJ Govindarajan MLA மாநெல்லூரில் ரத்ததான முகாம் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏமேலும் செய்திகள்
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர்; அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!