பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி சொத்துவரி உயர்வுபற்றி மட்டும் கேளுங்கள்: நயினார் நாகேந்திரன் மழுப்பல்
2022-04-09@ 00:19:39

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு நயினார் நாகேந்திரன் பதில் கூறாமல் மழுப்பினார். தமிழக பாஜ சார்பில் தமிழக அரசு விதித்துள்ள சொத்து வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி மற்றும் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன் மற்றும் பாஜவினர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழக அரசு திடீரென சொத்து வரியை உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனை திரும்பப் பெற வேண்டும் என்றார்.
சொத்து வரி உயர்வுக்கு ஒன்றிய அரசு தான் காரணம் என்று தமிழக அரசு கூறுகிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒன்றிய அரசு சொத்து வரியை உயர்த்த கூறவில்லை, ஒழுங்குபடுத்த தான் கூறியது, மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேட்டபோது தற்போது சொத்துவரி பற்றிய கேள்வியை மட்டும் கேளுங்கள் என்று கூறி அதற்கு பதில் கூறாமல் மழுப்பினார் என்றார்.
மேலும் செய்திகள்
மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?.. சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா?: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணி; வாகன பார்க்கிங் அமைக்க கடைகளை அகற்ற முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர், உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிப்.24, 25 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!