டாக்டர் சுப்பையா சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு
2022-04-01@ 02:19:49

சென்னை: தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி கேட்டு, பாஜ மாணவர் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்தவர்கள், தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கைது செய்யப்பட்ட தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார். இதையடுத்து, டாக்டர் சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். இவற்றை எதிர்த்து டாக்டர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுப்பையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம், ஏபிவிபி ஒரு அரசியல் சார்ந்த அமைப்பு தான். துறைரீதியான விசாரணை நடந்து வருவதாகவும், அதனை தொடர அனுமதிக்க வேண்டும் என்று விளக்கமளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை சுப்பையா வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
Tags:
Dr. Subbaiah Suspended Canceled ICC Judgment டாக்டர் சுப்பையா சஸ்பெண்ட் ரத்து ஐகோர்ட் தீர்ப்புமேலும் செய்திகள்
முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி; கலெக்டர் ஆர்த்தி தகவல்
தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் கழிவுநீர் குட்டையான ரங்கசாமி குளம் சீரமைக்க பொதுக்கள் கோரிக்கை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!