எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மீனவர்களை 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
2022-03-31@ 08:24:59

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி படகுடன் 3 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பது மற்றும் தாக்குவது, கைது செய்வது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு விசைப்படகுடன் 3 மீனவர்களையும் மயிலிட்டி துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால் தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு ஒன்றிய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்புன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே சொர்ணகடேஸ்வரர் கோவிலில் சோழர் கால மன்னர்களில் 2 சிலை மாயம்...
தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாட்டம்...
காவல்துறையில் 3 அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கம்
அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ‘டிவிட்’ செருப்பு வீசிய சின்ட்ரெல்லா வந்து பெற்றுக்கொள்ளலாம்: சமூக வலைதளத்தில் வைரல்
பஸ் கட்டணம் உயர்த்தப்படாது: போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி
வெம்பக்கோட்டை அகழாய்வில் வேலைப்பாடுடன் கூடிய கொம்பு கண்டெடுப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!