தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு; தற்போது சிகிச்சையில் 339 பேர் மட்டுமே உள்ளனர்: சுகாதாரத்துறை அறிக்கை..!
2022-03-29@ 19:39:54

சென்னை: தமிழகத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,751 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,14,387ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 339 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கோவளம் ஒருங்கிணைந்த வடிகால் திட்டத்துக்கு ஆணையம் அனுமதி
சென்னையில் உள்ள ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலம்; அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
இந்தாண்டு சிறப்பு தணிக்கை மூலம் அரசுக்கு ரூ.158 கோடி வருவாய்; ஜிஎஸ்டி மண்டல தலைமை ஆணையர் தகவல்
மண்டல வருமான வரித்துறையில் ரூ.1 லட்சம் கோடி வரி வசூல்; தலைமை ஆணையர் பேச்சு
நடப்பு ஆண்டில் ஐசிஎப் சார்பில் 3,500 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்; பொது மேலாளர் தகவல்
6 வருடங்களுக்கு பிறகு ரிப்பன் மாளிகையில் தேசிய கொடி ஏற்றம்; மேயர் பிரியா தலைமையில் நடந்தது
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!