SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறந்தாங்கியில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட குடமுழுக்கு: பங்காரு அடிகளார் பங்கேற்பு

2022-03-28@ 16:36:11

மதுராந்தகம்: அறந்தாங்கியில் நேற்று ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் திருக்குடமுழுக்கு விழாவை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பங்கேற்று நடத்தி வைத்தார். முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்க, கடந்த 26ம் தேதி ஆன்மிக குரு பங்காரு அடிகளார் காரைக்குடி வந்தார், அவருக்கு வழிநெடுகிலும் செவ்வாடை பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பெரம்பலூரில் பங்காரு அடிகளாரை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் சந்தித்து ஆசிபெற்றனர்.

இந்நிலையில், நேற்று (27ம் தேதி) அறந்தாங்கி, பழைய அரசு மருத்துவமனை சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தர், சக்தி பீடத்தின் திருக்குடமுழுக்கு விழாவை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பங்கேற்று, கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி நடத்தி வைத்தார். கருவறையில் இருந்த ஆதிபராசக்தி சிலைக்கு லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்வித்தார். இதில், சமுதாய பணியாக ₹5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ராமச்சந்திரன் எம்எல்ஏ, ஆன்மிக இயக்க துணைத் தலைவர் தேவி ரமேஷ், அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் அரசு மருத்துவமனை சாலையில், நகர காவல்நிலையம் எதிரே புதிதாக அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் திருக்குடமுழுக்கு விழாவை ஆன்மிககுரு பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார். இதில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்