SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹர்ஷா டொயோட்டா வேலப்பன்சாவடி மற்றும் பல்லாவரம் ஷோரூமில் ‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’ அறிமுகம்.!

2022-03-28@ 10:14:36

சென்னை: டொயோட்டாவின் இந்த ஹேட்ச் பேக் ‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’ வாடிக்கையாளர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் இந்த வாகனத்தில் உள்ள அதி நவீன தொழில்நுட்பங்கள் மேலும் வாடிக்கையாளர்கள் கொடுக்கின்ற விலையைக்கு கிடைக்கின்ற அதிகப்படியான சிறப்பு அம்சங்கள் எனலாம். இன்று ஹர்ஷா டொயோட்டா ஷோரூம் இல் நடக்கும் அறிமுக விழாவில் இதன் ‘முதன்மை செயல் அலுவலர் - ஜெரோம் எட்வர்ட்’ மற்றும் ‘பொது மேலாளர் - மது’ அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர் மேலும் டொயோட்டா ஹர்ஷா வின் மதிப்புமிகு வாடிக்கையாளர்களும் பங்கேற்பது குறிப்பிடத்தக்க செய்தி.

இந்தியா முழுவதிலும் எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ.6,39,000* இலட்சத்தில் தொடங்கும் புதிய கிளான்ஸா மேம்பட்ட செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன்மிக்க கே - சீரிஸ் இன்ஜின்: 1197 சிசி இன்ஜின் திறன், 22+ kmpl மைலேஜ் மற்றும் ஐடில் ஸ்டார்ட் - ஸ்டாப் ஃபங்ஷனுடன்  மேனுவல் (MT) & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AMT) ஆகிய இரு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. ‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’வில் உள்ள 45-க்கும் அதிகமான சிறப்பம்சங்கள்: டொயோட்டாவின் சொந்த உருவாக்கமான டொயோட்டா ஐ-கனெக்ட் எனும் செயலி மூலம் டேட்டா நிறுவனத்துடன் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்காக வேண்டியபோது தொடர்புகொள்ள முடியும். இது ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் வழியாக செயலாக்க படுகிறது.

அத்துடன், பயனாளிகள் எப்போதும் கட்டுப்பாட்டையும், பயணிக்கும் இடங்களிலெல்லாம் இணைப்பு வசதியைக்  கொண்டிருப்பதையும் இது உறுதிசெய்யும்.  வியக்கவைக்கும் டிரைவிங் அனுபவத்திற்காக ஹெட்-அப் டிஸ்பிளே (HUD) ஹே டொயோட்டா வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் 360 டிகிரி கேமரா ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இணக்கவசதி கொண்ட ஸ்மார்ட்போன் வழியாக கட்டுப்பாட்டை நேர்த்தியாக அனுமதிக்கும் 9 அங்குல புதிய ஸ்மார்ட் பிளேகாஸ்ட் மூலம் முழுமையான பொழுதுபோக்கு மற்றும் இணைப்புநிலை அனுபவம் தரம் உயர்த்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்: 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷனுடன் (EBD) ஆன்ட்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்,  (VSC), ISOfix மற்றும் முழுமையான திறன்மிக்க கட்டுப்பாடு தொழில்நுட்ப (TECT)  பாடி.

கவர்ச்சிகரமான வெளிப்புற ஸ்டைலிங்: டொயோட்டாவுக்கே உரிய ஸ்டைலான முன்புற கிரில், ஸ்போர்ட்டியான முன்புற பம்ப்பர் மற்றும் அலாய் வடிவமைப்பு, ஐந்து உயிரோட்டமுள்ள வெளிப்புற வண்ணங்கள்: ஸ்போட்டிங் ரெட் (புதிய), கேமிங் கிரே (புதிய), என்டைசிங் சில்வர் (புதிய), இன்ஸ்டா ப்ளூ, கஃபே ஒயிட். உடனடியாக ஆன்லைனில் கடன் ஒப்புதல், யு-டிரஸ்ட் வழியாக எக்ஸ்சேஞ்ச் பலன்கள் மற்றும் 5 ஆண்டுகள் மற்றும் 2,20.000 கி.மீட்டர்கள் வாரண்ட்டி நீட்டிப்பிற்கான விருப்பத்தேர்வு.

‘K - சீரிஸ் இன்ஜின்’

கூல் நியூ கிளான்ஸாவில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AMT) என்ற இரு வேரியண்ட்களில், சக்தி வாய்ந்த மற்றும் அதே நேரத்தில் எரிபொருள் சிக்கனமுள்ள ‘K - சீரிஸ் இன்ஜின்’  இடம்பெற்றிருக்கிறது.  உயர்வான டிரைவிங் அனுபவத்தை வழங்க 66 KW (89 PS) ஆற்றல் வெளியீட்டுடன் 1197 சிசி திறன் அளவுள்ளதாக இந்த இன்ஜின் இருக்கிறது.  ஏற்கனவே இருந்து வரும் G, V. என்பவற்றோடு சேர்த்து E (புதிய), S (புதிய), என்ற இரண்டு புதிய கிரேடுகளில் இத்தயாரிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது.  

டொயோட்டாவிற்கு பாதுகாப்பு எப்போதுமே முதன்மை முன்னுரிமையாக இருப்பதால், 6 ஏர்பேக்குகள், EB உடன் கூடிய ABS, VSC, ISOfix, ஒரு TECT பாடி மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் ஆகியவற்றை உள்ளடக்கிய மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் தொகுப்புடன் கூல் நியூ கிளான்ஸா வெளிவருகிறது.

வெளிப்புறத்தில், ஒரு ஸ்டைலான டொயோட்டாவுக்கு உரிய முன்புற கிரில், ஸ்போர்ட்டியான முன்புற பம்ப்பரை உயர்த்திக் காட்டும் கார்பன் ஃபைபர் அம்சங்கள் மற்றும் 16 அங்குலத்துடன் மெல்லிய அலாய் வீல்கள், எல்ஈடி புரொஜக்டர் முகப்பு விளக்குகள், மற்றும் எல்ஈடி மூடுபனி விளக்குகள் ஆகியவை கூல் நியூ கிளான்ஸாவில் இடம்பெற்றுள்ளன. இப்புதிய கிளான்ஸா, ஸ்போர்ட்டிங் ரெட் (புதிய), கேமிங் கிரே (புதிய), என்டைசிங் சில்வர் (புதிய), இன்ஸ்டா புளு, கஃபே ஒயிட் என்ற 5 உயிரோட்டமான வெளிப்புற வண்ணங்களில் கிடைக்கிறது. ஒரு தனித்துவமான இரட்டை வண்ணத்தில் காரின் உள்புறம் மெருகூட்டப்பட்டிருப்பது இதன் அழகை இன்னும் அதிகமாக்குகிறது.

டொயோட்டாவின் இந்த ஹேட்ச் பேக் ‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’ வை தேசிய அளவில் அறிமுகப்படுத்திய விழாவில் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான செயலாக்க துணைத் தலைவரும் விற்பனை மற்றும் சந்தை செயலுக்கான உப தலைவரும் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு-
TKM-ன் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான செயலாக்க துணைத் தலைவர் திரு. தடாஷி அசாசுமா, டொயோட்டாவின் கூல் நியூ கிளான்ஸா அறிமுகம் பற்றி கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகள் காலஅளவில் இந்தியாவில் பலரது இதயங்களை கிளான்ஸா வென்றிருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் இப்புதிய காரை புக்கிங் செய்ய தொடங்கியிருக்கும் எமது வாடிக்கையாளர்களால் ஒரு நம்பகமான பிராண்டாக நாங்கள் கூல் நியூ கிளான்ஸா மூலம் மீண்டும் அங்கீகரிக்கப்படுவதில் மகிழ்கிறோம். டொயோட்டாவின் வடிவமைப்பாளர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கூல் நியூ கிளான்ஸா, டொயோட்டாவின் தனித்துவமான ஸ்டைலிங் மற்றும் ஸ்போர்ட்டியான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஸ்டைலான தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த, பாதுகாப்பான, வசதியான காரை விரும்பித் தேடுகிற வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு நேர்த்தியான விருப்பத்தேர்வாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஒரு ஸ்மார்ட்ஃபோன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் வழியாக இயக்கக்கூடிய டொயோட்டா i-கனெக்ட் என்ற டொயோட்டாவின் சொந்த தொழில்நுட்பமானது புதிய கிளான்ஸாவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நவீன இணைக்கப்பட்ட தொழில்நுட்பமானது, 45-க்கும் அதிகமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. கூல் நியூ கிளான்ஸாவை இன்னும் அற்புதமானதாக ஆக்குவது என்னவென்றால் எமது டீலர்ஷிப்புகள் அனைத்திலும் கிடைக்கக்கூடிய ‘இதயத்தைத் தொடுகிற வாடிக்கையாளர் அனுபவமே’. தரத்தையும், சேவையையும் வழங்குவதற்கான டொயோட்டாவின் பொறுப்புறுதியை முற்றிலும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான உரிமைத்துவ அனுபவமாக நியூ கிளான்ஸா வழங்குகிறது. இதன் மூலம் அனைவருக்கும் “மாபெரும் மகிழ்ச்சியை” இது உறுதிசெய்கிறது.”


TKM-ன் விற்பனை மற்றும் சந்தை செயல்உத்திக்கான AVP, திரு. அதுல் சூட், கூல் நியூ கிளான்ஸாவிற்கான சந்தையாக்கல் உத்தி கண்ணோட்டத்தின் அடிப்படையில் பேசுகையில், “TKM-ல் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தயாரிப்புகளையும், சேவைகளையும் வழங்குவது மீது நாங்கள் எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறோம். அவ்வாறு செய்கையில் டொயோட்டா அனுபவத்தைப் பெற அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எமது முயற்சியாக இருக்கிறது. மதிப்பு மற்றும் ஸ்டைலை எதிர்பார்க்கிற இளம் தலைமுறையினரின் தேவைகளை இதன் மூலம் நாங்கள் பூர்த்தி செய்ய விளைகிறோம். கூல் நியூ கிளான்ஸாவின் அறிமுகம் இந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கை.

எமது புகழ்பெற்ற, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸுடன் டொயோட்டாவை வாங்கவும் மற்றும் அனுபவித்து மகிழவும் அதிக நபர்களை தொடர்ந்து ஏதுவாக்குவது எமது இலக்காக இருக்கும். புகழ்பெற்ற உலகத்தர நிலைகளிலான டொயோட்டா சர்வீஸ் தரத்துடன் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதிக பயிற்சி பெற்ற பணியாளர்கள் உடனடியாகவும், உரிய நேரத்திலும் உங்களது காரை அதிக அக்கறையோடு கவனித்து சர்வீஸ் மற்றும் பராமரிப்பை வழங்குகின்றனர். இந்த அற்புதமான அம்சங்களின் தொகுப்புக்கும் கூடுதலாக, கட்டுபடியாகக்கூடிய மிதமான கட்டணத்தில் பராமரிப்பையும் டொயோட்டாவின் இந்த புதிய ஹேட்ச்பேக் வழங்கும் என்பதால் முழுமையான மனநிம்மதி உறுதிசெய்யப்படுகிறது,” என்று கூறினார்.

டொயோட்டாவால் வழங்கப்படும் தனித்துவமான அனுபவத்திற்கு மிகச்சரியாகப் பொருந்துவதற்கென கூல் நியூ கிளான்ஸாவின் இன்டீரியர்கள் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.  விசாலமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம், டில்ட் மற்றும் டெலஸ்கோப்பிக் ஸ்டீரிங், புஷ் ஸ்டார்ட் வசதியுடன் ஸ்டீயரிங் மீது பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கண்ட்ரோல், ஃபுட்வெல் & கர்ட்டஸி விளக்குகள், 9 அங்குல அளவுடன் புதிய ஸ்மார்ட் பிளேகாஸ்ட், ஆட்டோ EC IRVM, க்ரூஸ் கண்ட்ரோல், பின்புறத்தில் ஏசி வென்ட்கள், யுவி பாதுகாப்பு கண்ணாடி, யுஎஸ்பி ரியர் மற்றும் ஆட்டோ ஏசி ஆகிய அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து உற்சாகமான பயணத்தில் அதிக வசதியை சேர்த்துத் தரும் வகையில் காரின் உட்புறம் அமைந்திருக்கிறது.  இதன் சிறப்பான இரட்டை வண்ணங்கள் கூடுதல் அழகை சேர்த்து தருகின்றன.  

வாடிக்கையாளர் திருப்தியை மேலும் மேம்படுத்துவதற்கு 3 ஆண்டுகள் / ஒரு இலட்சம் கி.மீட்டர்கள் என்ற வாரண்ட்டி மற்றும் 5 ஆண்டுகள் / 2,20,000 கி.மீட்டர்கள் வரை வாரண்ட்டியை நீடிக்கக்கூடிய விருப்பத்தேர்வு ஆகியவற்றின் வழியாக புகழ்பெற்ற டொயோட்டா அனுபவம், கூல் நியூ கிளான்ஸாவுடன் சேர்த்து கிடைக்கிறது.  எக்ஸ்பிரஸ் மெயிண்டனன்ஸ் வழியாக வெறும் 60 நிமிடங்களுக்குள் குறித்த காலஅளவிலான சர்வீஸை செய்துகொள்ளும் வசதி மற்றும் ஆன்லைனில் சர்வீஸ் முன்பதிவை செய்யும் வசதி, 24 x 7 சாலையோர சர்வீஸ் வசதி ஆகியவை இதனை இன்னும் சிறப்பானதாக ஆக்குகின்றன.

வாகனத்தை சொந்தமாக வாங்குவதற்கான முழு தொகைக்கும் பிரத்யேக நிதியுதவி திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென்றே தனிப்பயனாக்கப்பட்ட  பல சலுகைகளுடன்    கூல் நியூ கிளான்ஸா கிடைக்கிறது.    கடந்த பல ஆண்டுகளாகவே டொயோட்டா ஃபைனான்ஸ் சர்வீசஸ்க்கும் கூடுதலாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான வட்டி விகிதங்களில் எளிதான நிதியுதவிக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கென பல நிதி நிறுவனங்களுடன் இந்நிறுவனம் கூட்டுவகிப்பை மேற்கொண்டிருக்கிறது.  அதைப்போலவே, டொயோட்டா யு டிரஸ்ட் வழியாக, வாகனங்களை தரம் உயர்த்துதல் மற்றும் எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் நம்பகமான, வெளிப்படைத் தன்மையுள்ள மற்றும் எளிதான ஒற்றை நிறுத்த தீர்வை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

கூல் நியூ கிளான்ஸாவை வீட்டில் சௌகரியமாக இருந்துகொண்டே டொயோட்டா விர்ச்சுவல் ஷோரூம் என்பதன் வழியாக நேரடியாகப் பார்வையிடுவதற்கு நிகரான அனுபவத்தைப் பெறமுடியும்.  காரின் மீது 360  டிகிரி வெளிப்புற மற்றும் உட்புற தோற்றங்களை சிரமமின்றி பார்க்க முடியும் என்பதோடு, கிடைக்கக்கூடிய வேரியண்ட்கள் மற்றும் வண்ணங்களை சரிபார்க்கவும் மற்றும் அதன் முக்கிய அம்சங்களை அனுபவித்து உணரவும் முடியும்.  அத்துடன், வேரியண்ட்கள் ரீதியான ஒப்பீட்டையும் பெறமுடியும்.  இவ்வாகனத்தை ஒரேயொரு பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் முன்பதிவு செய்யவும் இது அனுமதிக்கிறது.  “நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு நாங்கள்” என்பதன் ஒரு உண்மையான பிரதிபலிப்பாக இந்த மெய்நிகர் அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.  

வெறும் ரூ.11,000 என்ற தொகையை செலுத்துவதன் மூலம் டொயோட்டா கூல் நியூ கிளான்ஸாவிற்கான முன்பதிவுகள் 2022 மார்ச் 9 ஆம் தேதியிலிருந்து தொடங்கியுள்ளன.  சென்னையில் உள்ள வேலப்பன்சாவடி மற்றும் பல்லாவரம் டொயோட்டா ஹர்ஷா டீலர்ஷிப்புக்கு நேரில் விஜயம் செய்யலாம்.  அதிக விவரங்களைப் பெற www.toyotabharat.com என்ற இணையதளத்தைக் காணலாம்.  நாடெங்கிலும் 276 நகரங்களில் (278 விற்பனை மற்றும் 343 சர்வீஸ் அவுட்லெட்கள் / தொடுமுனைகள்) கூல் நியூ கிளான்ஸா காருக்கான சர்வீஸை செய்துகொள்ள முடியும்.

வேரியண்ட்கள்    MT    AMT

டொயோட்டா கிளான்ஸா  E    ரூ. 6,39,000    -
டொயோட்டா கிளான்ஸா  S    ரூ.7,29,000    ரூ. 7,79,000
டொயோட்டா கிளான்ஸா  G    ரூ. 8,24,000    ரூ. 8,74,000
டொயோட்டா கிளான்ஸா  V    ரூ. 9,19,000    ரூ. 9,69,000

* மேற்கண்டவை எக்ஸ்ஷோரூம் விலைகள் மற்றும் இந்தியா முழுவதற்கும் இது பொருந்தும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்