மெரினா கலங்கரை விளக்கத்தை தகர்ப்பதாக மிரட்டல் மர்ம நபரின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்: க்யூ பிரிவு போலீசார் விசாரணை
2022-03-28@ 01:46:38

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தை, சுற்றுலா பணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், மர்ம நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த கலங்கரை விளக்கம் தகர்க்கப்படும் என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். இந்த பதிவை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதுபற்றி அறிந்த அதிகாரிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படத்துடன் மெரினா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலங்கரை விளக்கம் நுழைவு வாயிலை பூட்டு போட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதி முழுவதும் ரோந்து வாகனம் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் காணப்பட்டால் அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, அந்த மர்ம நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சைபர் க்ரைம் போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் க்யூ பிரிவு போலீசாரும் மெரினா போலீசாருடன் இணைந்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Tags:
Marina lighthouse intimidation Instagram page freeze Q Division police investigation மெரினா கலங்கரை விளக்க மிரட்டல் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம் க்யூ பிரிவு போலீசார் விசாரணைமேலும் செய்திகள்
குஜராத்தில் ரூ.1125 கோடி போதைப்பொருள் பறிமுதல்
சுதந்திர தின கொண்டாட்ட உற்சாகம் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் விருந்து: ராஜஸ்தானில் அதிர்ச்சி
தொழிலதிபர் போட்டு அழகுபார்த்த 550 சவரன் நகையை மாடல் அழகி பதுக்கினாரா? காவலில் எடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
ரூ.5000 லஞ்சம் கூட்டுறவு சங்க ஊழியருக்கு 3 ஆண்டு சிறை
ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்பு: திண்டுக்கல் அருகே புரோக்கர் உட்பட 4 பேர் கைது
‘தீரன் அதிகாரம் ஒன்று’ சினிமா பாணியில் மூதாட்டியை கொன்று கொள்ளை மாணவர் உள்பட 3 பேர் கைது
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!