SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடுங்கள்... உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு!!

2022-03-24@ 10:37:26

கீவ் : உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 29வது நாளாக தாக்குதலை தொடரும் நிலையில், உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். போர் காரணமாக உக்ரைனின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் நடைபெற உள்ள நேட்டோ, ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடுகளில் நண்பர்கள் யார், நம்மை காட்டிக் கொடுத்தவர்கள் யார் என்று தெரிய வரும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.ரஷ்ய தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர உலக மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் ஆயுதங்கள் வழங்கவில்லை என்றும் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு அவர் கூறியதாவது, 'இந்த நாளில் இருந்து நீங்கள் உக்ரைனை ஆதரிக்கிறீர்கள் என்பதை காட்டுங்கள்.உங்கள் அலுவலகங்கள், உங்கள் வீடுகள், உங்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வாருங்கள்.அமைதியின் பெயரில் வாருங்கள். உக்ரைனை ஆதரிக்க, சுதந்திரத்தை ஆதரிக்க வாழ்க்கையை ஆதரிக்க உக்ரேனிய சின்னங்களுடன் வாருங்கள்.உங்கள் தெருக்களுக்கு வாருங்கள். சுதந்திரம் முக்கியம், அமைதி முக்கியம், உக்ரைன் முக்கியமானது. மார்ச் 24 முதல் உங்கள் நகரங்களில் போரை நிறுத்த விரும்பும் அனைவரும் ஒன்றாக திரளுங்கள்,'என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்