விருதுநகரில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைதானது ஆறுதலை தருகிறது: கனிமொழி எம்.பி.
2022-03-22@ 10:30:33

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது என திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இளம்பெண்ணை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த காதலன் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் என்ற பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண் அங்கு உள்ள கார்மெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அதே மாவட்டத்தை சேர்ந்த ஹரிகரன் என்பவர் அப்பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி இருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹரிஹரன் அந்த பெண்ணை மெடிக்கல் குடோன் ஒன்றுக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதை செல்போன் மூலம் படம் எடுத்து அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்ததாகவும் தெரிகிறது. மேலும் காதலித்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட போவதாக கூறி மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து அவரது நண்பர்கள் மற்றும் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் அந்த வீடியோவை பார்த்து பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் வீடியோவை காட்டி இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரில் ஹரிகரன், அவரது நண்பர்கள், 4 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ஆக-08: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழப்பு இஸ்ரோ அறிவிப்பு
ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்
அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை
கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் டெல்லியில் அனைத்து கட்சியினர் மரியாதை
வரும் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்; எல்.முருகன் வேண்டுகோள்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!