SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் போயிங் விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது: 132 பேர் உயிரிழப்பு; கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!!

2022-03-22@ 10:03:30

பிஜீங்:சீனாவில் விபத்து நிகழ்ந்த விமானத்தில் இருந்த 132 பேரும் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன், எச்என்ஏ. என அரசுக்கு சொந்தமான 4 விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் 123 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 132 பேருடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி புறப்பட்டது. இது டெங்ஷியன் கவுண்ட்டியில் உள்ள வூஜோவை கடந்த போது, எதிர்பாராத விதமாக மலையில் மோதி தீப்பிடித்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் மலையில் மோதி, எரிந்து பள்ளத்தாக்கில் விழுந்ததை சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தினால் விமானத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துள்ளதாக சீன அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 117 தீயணைப்பு வீரர்கள், 23 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், குவாங்சி கவுண்டியில் இருந்து 538 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், 18 மணி நேர தேடுதல் பணிகளுக்குப் பிறகும் இதுவரை காயங்களுடன் யாரும் மீட்கப்படவில்லை என்று சிசிடிவி எனப்படும் அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.இது தவிர, விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். எனினும், விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்டால்தான் விபத்துக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

* 12 ஆண்டுகளுக்கு பிறகு விபத்து
சீன அரசுக்கு சொந்தமான ஹீனன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ப்ரேயர் ஈஆர்ஜெ190-100 ரக விமானம் 44 பயணிகளுடன் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி ஈச்சூன் நகர விமான நிலையத்தில் தரையிறங்கும் போது எரிபொருள் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று எம்யூ5735 விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

* 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தது
விபத்துக்குள்ளான விமானம் வானில் சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தலைகுப்புற விழுந்ததாக சில வீடியோக்கள் வெளியாகி உள்ளன. கீழே விழுந்தன விமானத்தின் முன்பகுதி மலையின் மீது மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன் காரணமாக விமானத்தில் இருந்து யாரும் உயிர் தப்பியிருக்க முடியாது என கருதப்படுகிறது. இந்த விமான விபத்தை தொடர்ந்து இந்தியாவில் போயிங் 737 ரக விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்கள் அவ்விமானங்களை ஆய்வு செய்து கண்காணிக்குமாறு விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

* பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ``சீனாவின் குவாங்சியில் இருந்து 132 பேருடன் புறப்பட்ட எம்யூ5735 விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி, வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்கள், அவர்களது குடும்பத்தினரை எங்களது பிரார்த்தனையில் நினைவு கூருகிறோம்,’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்