கடந்த 9 மாதங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2400 கோடி சொத்துகள் மீட்பு.! அமைச்சர் சேகர்பாபு பேட்டி
2022-03-21@ 14:35:15

பெரம்பூர்: ஓட்டேரி விநாயகர் கோயிலில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 9 மாதங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2400 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை ஓட்டேரியில் உள்ள விநாயகர் கோயிலில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:தமிழகத்தில் பராமரிப்பு பணி மற்றும் குடமுழுக்கு நடைபெறாத கோயில்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. திருக்கோயில்களில் தெய்வங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன. முன்பு ரூ.1000 கோடி அளவிலான கோயில் நிலங்கள் மீட்போம் என தெரிவித்தோம். தற்போது ரூ.2400 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம். 500க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த மானிய கோரிக்கையில் வெளியான 112 அறிவிப்புகளில் 80 சதவீத பணிகளுக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோயில் திருப்பணிகளுக்கு ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அறிக்கையை பெற்று, தமிழக முதல்வரிடம் வழங்கி, சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பிரச்னைகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்க, துணை ஆணையர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை கிடைத்ததும், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 1,057 பேர் பாதிப்பு; உயிரிழப்பு ஏதும் இல்லை : 1,429 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
செல்போனில் காதலியுடன் மோதல் தீக்குளித்த காதலன் கவலைக்கிடம்
கருணாநிதி நினைவு நாள்: கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழில் டுவீட்
ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ராணிப்பேட்டையில் 2வது நாளாக நிதிநிறுவன உரிமையாளரின் நண்பர் வீட்டில் சோதனை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!