பொன்னேரி அருகே கோயில் கும்பாபிஷேகம்
2022-03-14@ 01:30:24

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் கிராமத்தில் ஸ்ரீவைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் கோயில் உள்ளது. இது அந்த பகுதியில் பிரபலமான மிகவும் பழமையான கோயிலாகும். இந்த கோயில் புனரமைக்கப்பட்டு கோபுரம் மற்றும் விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கான மூன்று கால யாக பூஜையில் முழுக்க முழுக்க தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு அர்ச்சனைகளும் தமிழிலேயே செய்யப்பட்டது. தொடர்ந்து, கலசநீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலய கோபுரங்களுக்கு திருக்குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. இதில் பொன்னேரி சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெரவள்ளூர் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
வருமானத்துக்கு அதிகாமாக 315% சொத்து குவித்ததாக வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!