படம் பார்த்து மனம் மாறினார் எதிரி நடிகையை பாராட்டிய கங்கனா
2022-03-02@ 00:46:29

மும்பை: படம் பார்த்துவிட்டு மனம் மாறிய கங்கனா ரனவத், தனது எதிரி நடிகையை பாராட்டியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்தபோது, பாலிவுட்டில் நெப்போடிசம் அதிகரித்து விட்டதாக குரல் எழுந்தது. இதனாலேயே சுஷாந்த் சிங் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்ததாக பலரும் குற்றம்சாட்டினர். அதில் கங்கனா ரனவத்தும் ஒருவர். குறிப்பாக நடிகை அலியா பட்டை தாக்கி அப்போது கடும் விமர்சனங்கள் செய்திருந்தார் கங்கனா.
இயக்குனர் மகேஷ் பட்டின் மகள், நடிகை பூஜா பட்டின் தங்கை என்பதாலேயே அலியாவுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதாக கங்கனா புகார் கூறியிருந்தார்.
சில நாட்களுக்கு முன் கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடிக்க அலியா சரியான தேர்வு கிடையாது என்றும் கங்கனா வசைபாடியிருந்தார். இந்நிலையில் இந்த படம் ரிலீசான நிலையில் தனது கருத்திலிருந்து மாறுபட்டிருக்கிறார் கங்கனா.
அவர் கூறுகையில், ‘தென்னிந்திய படங்கள்தான் இப்போதும் பாலிவுட்டில் நல்ல வசூல் ஈட்டுகின்றன. அதே சமயம், எப்போதாவது இந்தி படங்களும் ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுத்து வருகிறது. அந்த வகையில் கங்குபாய் கத்தியவாடி படத்தை பாராட்டலாம். பெண் கேரக்டரை முன்னிலைப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். அந்த கேரக்டரின் வலுவை காட்டியுள்ளனர். அலியா நன்றாக நடித்துள்ளார். இது எதிர்பாராத நல்ல படம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு ஜனநாயகத்திற்கு கடும் சவால் 11 எதிர்க்கட்சிகள் தீர்மானம்
சுதந்திர தின விழாவில் பயங்கரவாத சதியா? இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் கைது: ஐதராபாத், நேபாளத்தில் இருந்து உதவிய வாலிபர்கள்
இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பம்: பிரதமர் மோடி நம்பிக்கை
இன்று மாலை ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரை
காஷ்மீரில் தீவிரவாத தொடர்பு முஜாகிதீன் தலைவன் மகன், 3 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
ஆர்எஸ்எஸ் டிபி.யில் தேசியக் கொடி படம்: சர்ச்சைக்குப் பிறகு திடீர் மாற்றம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!