பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் இன்று துவக்கம்: ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
2022-02-28@ 00:59:45

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று காலை பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் விழா துவங்குகிறது. நாளை மறுதினம் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 82வது பிறந்த நாள் விழா மார்ச் மாதம் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழா, இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளதால் வண்ண விளக்குகளாலும் கொடி, தோரணம், வாழைமரம் உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் பிறந்தநாள் விழா இன்று காலை 3 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.
பின்னர், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை, கலச விளக்கு வேள்வி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை பங்காரு அடிகளாரை வெள்ளி ரதத்தில் ஊர்வலமாக சித்தர் பீடம் அழைத்து வரும் நிகழ்ச்சி, பக்தர்களின் பாதபூஜை, ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுதினம் காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை பங்காரு அடிகளாரை தங்கரதத்தில் சித்தர் பீடம் அழைத்து வருதல், மாலை 5 மணிக்கு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விழா மலர் வெளியீடு உள்ளிட்ட மேடை நிகழ்ச்சி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதில், தெலுங்கானா ஆளுநரும், பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பங்காரு அடிகளாரின் பிறந்த நாளான 3ம் தேதி, பக்தர்கள் பங்காரு அடிகளாரை அவரது இல்லத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக சித்தர் பீடம் அழைத்து வருகிறார்கள். அங்கு அவரது பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் செய்து வருகிறது.
Tags:
Bangaru Adigalar Birthday Celebration Melmaruvathur Siddhar Peetha starts today பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா மேல்மருவத்தூர் சித்தர் பீட இன்று துவக்கம்மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் அருகே அதிமுக பிரமுகரின் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி பலி: 25 பேர் படுகாயம்
கோடை உழவு செய்தால் மண் வளம், விளைச்சல் பெருகும்-விவசாயிகளுக்கு வழிகாட்டும் வேளாண் அதிகாரிகள்
சிப்காட் அரசு பள்ளியில் விழா மாணவர்களின் கல்வி நலனில் பெற்றோருக்கும் அதிக பொறுப்பு-வட்டார கல்வி அலுவலர் பேச்சு
சீசன் துவங்கியதால் வாட்டர் ஆப்பிள் வரத்து அதிகரிப்பு-கிலோ ரூ.240க்கு விற்பனை
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ₹90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
ஆத்தூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெல்மணிகள்
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!