திருவாரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகைக் கடைக்காரர் பலி: பாதிக்கப்பட்ட உறவினர்கள் சாலை மறியல்
2022-02-25@ 10:18:03

திருவாரூர்: திருவாரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகைக் கடைக்காரர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நடவடிக்கை கோரி மறியலில் ஈடுபட்டனர். குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். மளிகை கடை நடத்திவரும் இவர், கும்பகோணத்தில் பொருட்களை வாங்கி கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஐயப்பன் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பூந்தோட்டம் நாச்சியார் கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களில் எரவான்சேரி காவல்துறையினர் சமரசம் செய்து வைத்தனர். விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்வதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தோவாளை-தாழக்குடி சாலை; ரூ.3.28 கோடியில் சீரமைப்பு: ரூ.3.87 கோடியில் ஆற்றின்குறுக்கே பாலமும் அமைக்கமுடிவு
மேட்டூர் அணைக்கு 19,000 கனஅடி நீர்வரத்து
வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது
கேரளாவில் 31ம் தேதி ஓணம் பண்டிகை; தோவாளையில் அறுவடைக்கு தயாரான பூக்கள்: ஆர்டர்களும் குவிந்து வருகிறது
பழநி மலைக்கோயில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...