மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான 1 கிரவுண்ட் சொத்துகள் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை
2022-02-24@ 00:33:44

சென்னை: மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான 1 கிரவுண்ட் சொத்துகளை மீட்டு அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இதில், மயிலாப்பூர் கச்சேரி சாலையில் 1 கிரவுண்ட் (2,400 சதுர அடி) பரப்பு கொண்ட தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டிடம் ஒன்றும் உள்ளது. இந்த கட்டிடத்தை ஸ்ரீராமுலு செட்டியார் அறக்கட்டளை சார்பில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலுக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டன. கட்டிடத்தில் ஏற்கனவே வாடகையில் இருந்தோர், கோயில் நிர்வாகத்துக்கு வாடகை பாக்கி செலுத்த முன்வரவில்லை. இது தொடர்பாக, கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனாலும் வாடகைதாரர்கள் வாடகை செலுத்த முன்வராத நிலையில், கடந்த 1992ம் ஆண்டு சென்னை மாநகர 5வது உரிமையியல் நீதிமன்றம் சார்பில் மாதவ பெருமாள் கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில், வாடகை பாக்கி மற்றும் உள் வாடகைதாரரர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அவர்களை வெளியேற்ற கடந்த 17ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மாதவ பெருமாள் கோயில் செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் நாராயணன், நீதிமன்ற அலுவலர் அமீனா முன்னிலையில் நேற்று சுவாதீனம் செய்யப்பட்டன. தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் அந்த கட்டிடத்துக்கு பூட்டுக்கள் பூட்டப்பட்டு கோயிலின் முத்திரையிடப்பட்டு, அதன் வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ.8 கோடி என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:
Mylapore Madhava Perumal Temple owned by Rs 8 crore 1 Ground Property Recovered மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில் சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான 1 கிரவுண்ட் சொத்துகள் மீட்புமேலும் செய்திகள்
கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 10 இடங்களில் தானியங்கி மழை அளவீடு: இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டம்
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்...
சென்னை மாநகராட்சியில் வார்டு அளவிலான நீர் மேலாண்மையை ஆய்வு செய்ய திட்டம்: இதுவரை 10,000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு
சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 2 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சி...
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...