ஊத்துக்கோட்டையில் திமுக இமாலய வெற்றி: போட்டியிட்ட 14 வார்டிலும் பாஜ டெபாசிட் இழந்தது
2022-02-23@ 02:23:55

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக 13 இடங்களை பிடித்து இமாலய வெற்றி பெற்றது. பின்னர், திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் பாஜ போட்டியிட்ட 9 வார்டுகளிலும், அதிமுக 3 வார்டுகளிலும் டெபாசிட்டை இழந்தன. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில், 12வது வார்டில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மீதமுள்ள 14 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது.
அதன் விவரம் வருமாறு:
1வது வார்டு(திமுக வெற்றி): சமீமா ரகீம் (திமுக) - 646, ரகமத் பீ (அதிமுக) - 139.
2வது வார்டு(திமுக வெற்றி): இந்துமதி (திமுக) - 202, மோகனா (அதிமுக) - 65.
3வது வார்டு(திமுக வெற்றி): அப்துல் ரஷீத் (திமுக) - 180, அதிமுக ஷேக்தாவுத் (அதிமுக) - 147.
4வது வார்டு(திமுக வெற்றி): அபிராமி (திமுக) - 234, கோமளா (அதிமுக) - 211.
5வது வார்டு(திமுக வெற்றி): கோகுலகிருஷ்ணன் (திமுக) - 321, புவனா (அதிமுக) - 200.
6வது வார்டு(அதிமுக வெற்றி): ஆனந்தி (அதிமுக) - 443, செந்தாமரை (திமுக) - 282.
7வது வார்டு(திமுக வெற்றி): குமரவேலு (திமுக) - 392, ராசமாணிக்கம் (அதிமுக) - 157.
8வது வார்டு(திமுக வெற்றி): திரிபுரசுந்தரி (திமுக) - 293, வள்ளி (அதிமுக) - 155.
9வது வார்டு(திமுக வெற்றி): ஜீவா (திமுக) - 244, திருநாவுக்கரசு (அதிமுக) - 88.
10வது வார்டு(திமுக வெற்றி): ஆப்தாப்பேகம் (திமுக) - 154 (குலுக்கல் முறை வெற்றி), சாந்தி (சுயே.) - 154.
11வது வார்டு(திமுக வெற்றி): மணிகண்டன் (எ) கோல்டுமணி (திமுக) - 281, பிரஸ் பி.இ.மணி (அதிமுக) - 109.
13வது வார்டு(திமுக வெற்றி): கல்பனா பார்த்திபன் (திமுக) - 366, அலமேலு (சுயே.) - 263.
14வது வார்டு(திமுக வெற்றி): சுமலதா நரேஷ் (திமுக) - 313, புஷ்பா (அதிமுக) - 67.
15வது வார்டு(அதிமுக வெற்றி): அருணாசலம் (அதிமுக) - 281, காஞ்சனா (திமுக) - 234.
என ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக 13 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. முன்னதாக தபால் வாக்குகள் 25ல் திமுக 15 வாக்குகளையும், அதிமுக 7 வாக்குகளையும், சுயேச்சை 2, பாஜ 1 வாக்கையும் பெற்றிருந்தன. மேலும், வெற்றி பெற்ற பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏவிடமும், முன்னாள் எம்எல்ஏ இஏபி.சிவாஜியிடம் வாழ்த்து பெற்றனர்.
* டெபாசிட் இழந்த கட்சிகள்
அதிமுக 3 வார்டுகளிலும், பாஜ போட்டியிட்ட 9 வார்டுகளிலும் டெபாசிட் இழந்தது. மேலும் காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் எம்எல் போன்ற கட்சிகளும், ஒரு சிலரை தவிர மற்றவர்களில் சுயேச்சைகள் டெபாசிட் இழந்தன.
Tags:
In Uthukottai DMK Himalayan victory contested in 14 wards Baja lost the deposit ஊத்துக்கோட்டை திமுக இமாலய வெற்றி போட்டியிட்ட 14 வார்டிலும் பாஜ டெபாசிட் இழந்ததுமேலும் செய்திகள்
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர்; அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!