சிங்கப்பூரில் மரண தண்டனை கடைசி நேரத்தில் தப்பிய தமிழர்கள்: அதிபர் கருணை
2022-02-19@ 00:12:48

கோலாலம்பூர்: சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் பெரும் குற்றமாக கருதப்படுகிறது. 15 கிராம் ஹெராயினுடன் சிக்கினாலே மரண தண்டனை நிச்சயம். இதுபோன்ற வழக்கில் பல மலேசிய, சிங்கப்பூர் தமிழர்கள் சிக்கி, மரணத்தை எதிர்நோக்கி உள்ளனர். மலேசிய தமிழரான பவுசி ஜெப்ரிடின், சிங்கப்பூர் தமிழரான ரோஸ்லன் பாகர் ஆகியோர், சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் 2010ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற நாள் குறித்த போதெல்லாம், பலமுறை இவர்களின் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இருவரும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் என அவர்களின் வழக்கறிஞர்கள் கூறி வருவதே இதற்கு காரணம்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இவர்களின் மரண தண்டனை மீண்டும் நிறைவேற்றப்பட இருந்தது. அதை நிறுத்தும்படி அதிபர் ஹலிமா யாகூப்புக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. இதை ஏற்ற அவர், தண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார். சிங்கப்பூரில் ஏற்கனவே ஹெராயின் கடத்தல் வழக்கில் நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற மலேசிய தமிழர் உட்பட பல தமிழர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். இவர்களுக்கு மன்னிப்பு வழங்கும்படி பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து நாட்டில் தஞ்சம்..!
சீனாவில் புதிய வைரஸ் லங்யா: 35 பேர் பாதிப்பு
இலங்கை, பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் வலையில் சிக்கியது நேபாளம்: ரூ.1,500 கோடி கடன் உதவி
22ஏ சட்டத் திருத்தத்தில் மாற்றம் பிரதமர், அமைச்சர்களை அதிபரால் நீக்க முடியாது: இலங்கை அமைச்சர் தகவல்
சீன தூதரை அழைத்து இங்கிலாந்து கண்டிப்பு
நீல வில்லை விருது நவ்ரோஜியின் லண்டன் வீட்டுக்கு சிறப்பு கவுரவம்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!