கோவிட் தொற்றுக்கு பிறகு சென்னையில் தைராய்டு கண்நோய் பாதிப்பு 25% அதிகரிப்பு: அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் அஸ்வின் அகர்வால் தகவல்
2022-02-11@ 00:04:52

சென்னை: கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு சென்னையில் தைராய்டு கண்நோய் 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறினார். இதுகுறித்து டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறியதாவது: பார்வைத் திறனை அச்சுறுத்தும் பிரச்னைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான தைராய்டு கண் நோய் பாதிப்பு எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு சென்னையில் ஏறக்குறைய 25% அதிகரித்துள்ளது.
தாமதிக்கப்பட்ட நோயறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் காரணமாகவும் பெருந்தொற்று காலத்தின் போது அதிகரித்த மனஅழுத்த அளவுகளினாலும் கட்டுப்பாட்டின் கீழ் தைராய்டு அளவுகள் இல்லாத நிலை இந்த தைராய்டு பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவிற்கு கடுமையாக உயர்ந்திருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும். தைராய்டு கண் நோய் பார்வைத்திறனை அச்சுறுத்துவதாகவும், அதனை பலவீனப்படுத்துவதாகவும் இருக்கக்கூடும் தோற்றத்தை சீர்குலைக்கக் கூடிய நிலை இது கண்விழி விழிக்கோளத்திற்கு பின்புறத்திலுள்ள திசுக்களும் மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதியும் வீங்கி, வீக்கமடைந்ததாக கண்ணை தோன்றச் செய்யும். அருவருப்பூட்டும் தோற்றத்தை இது நோயாளிக்கு தரும். அயோடின் பற்றாக்குறையின் காரணமாக இது பொதுவாக ஏற்படுகிறது.
கண் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் அழகியல் சேவைகள் துறையின் தலைவர் டாக்டர் ப்ரீத்தி உதய் கூறியதாவது: நீண்ட நேரம் வாசிக்கும் போது இரட்டைப் பார்வை, கண்களை முழுமையாக தீவிர செயலாக்க நிலையில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளை லூப்ரிகன்ட்கள், ஸ்டீராய்டுகள், கதிரியக்க சிகிச்சை, நோய் எதிர்ப்புத்திறன் ஒடுக்கிகள் போன்றவற்றின் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். தீவிர செயலாக்கமற்ற காலகட்டத்தின்போது பெரும்பான்மையான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் எஸ்.சவுந்தரி கூறியதாவது: ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுமானால், தைராய்டு கண்நோயின் பெரும்பாலான அறிகுறிகளை குணப்படுத்தி முந்தைய இயல்பு நிலைக்கு கொண்டு வரமுடியும். இதன் மூலம் பெரும்பாலான நோயாளிகளுக்கு அவர்களது இயல்பான தோற்றத்தையும், செயல்பாட்டையும் மீண்டும் கொண்டுவர முடியும்.
Tags:
25% increase in Govt infection Chennai thyroid conjunctivitis கோவிட் தொற்று சென்னை தைராய்டு கண்நோய் பாதிப்பு 25% அதிகரிப்புமேலும் செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
ஷோ ரூமில் இருந்து ஓட்டி பார்ப்பதாக ஜீப்பை எடுத்துச் சென்ற நபர் எஸ்கேப்: “வடிவேலு காமெடி நிஜமானது’’
எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவச் சிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.!
மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட 13ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டுபிடிப்பு
சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை போக்குவரத்து மாற்றம்
மூவண்ணக் கொடியைப் போற்றுவோம்.! மூட அரசியல்தனத்தை அடக்குவோம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!