SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணுக்கரு இணைப்பில் அதிக ஆற்றலை கொணர்ந்து சாதனை: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி..!!!

2022-02-10@ 15:01:14

இங்கிலாந்து: அணுக்கரு பிணைப்பு தொழிநுட்பத்தின் மூலம் அதிக ஆற்றலை உருவாகும் முயற்சியில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் சுற்றுச் சூழலை பாதிக்காத எரிசக்தியை கண்டறிவதில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்திருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அணுக்களை அதிக வெப்ப நிலையில் இணைப்பது மூலம் அணுக்கருக்கள்  இணைந்து ஆற்றல் வெளிப்படுவது வழக்கம் தற்போது வரை அணுக்கரு இணைப்பு மூலம் 22 மெகா ஜூல் ஆற்றலை வெளிக்கொணரப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய முயற்சிகளின் பலனாக 59 மெகா ஜூல் ஆற்றல் வெளிகொணரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் அருகே நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது.

அறிவியலின் முன் நின்ற மிகப் பெரிய சவாலுக்கு தற்போது தீர்வை நெருங்கியுள்ளதாக இங்கிலாந்து அணுசக்தி ஆணையத்தின் தலைவர் இயன் சாப்மேன் தெரிவித்துள்ளார். உலகெங்கும் தற்போது பெட்ரோலியமே பிரதான எரிபொருளாக திகழும் நிலையில், அதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இந்நிலையில் சுற்றுசூழலை பாதிக்காத நடைமுறையில் எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய எரிபொருளை கண்டறியும் முயற்சி உலகெங்கும் நடந்து வரும் நிலையில் அணுக்கரு இணைவு மூலம் அதிக ஆற்றலை வெளிக்கொணர்ந்து உள்ளது மிக முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. மேலும் இது பாதுகாப்பான அணுமின் உற்பத்தி முறையாகவும் கருதப்படுகிறது.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்