SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியான நிலையில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க ஈரான் வீரருக்கு தடை..!!!

2022-02-10@ 13:20:31

டோக்கியோ: சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்ஸில் ரசிகர்களை கவர்ந்த Halfpipe Snow Boarding போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோகிம் தங்க பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். ஜாங்ஜிகாவோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முன்னிலை வீராங்கனைகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் 21 வயதான அமெரிக்காவின்  chloe kim லாவகமாக சறுக்கி அதிக புள்ளிகளை கைப்பற்றி முதல் இடத்தைப் பிடித்தார். ஸ்பெயின் நாட்டு வீராங்கனை queralt castellet வெள்ளி பதக்கத்தையும், ஜப்பானில் tomita sena வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர். இதே போன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆடவருக்கான கர்லிங் மற்றும் ஐஸ் ஹாக்கி போட்டிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

ஈரானை சேர்ந்த அல்பைன் பனிச்சறுக்கு வீரர் ஹொசைன் சவே ஷெம்ஷாகி ஒலிம்பிக்ஸில் போட்டியிட இடைக்கால தடை விதித்து, சர்வதேச ஊக்கமருந்து பரிசோதனை முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. இவருக்கு எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட எந்த விதமான நடவடிக்கையிலும் கொஷைன் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தபட்டுள்ளது. 36 வயதான கொஷைன் 2014 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸிலும் பங்கேற்று பதக்கம் வெல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.    

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்