புஷ்பா பட 'ஸ்ரீவள்ளி’ பாடலை ஆங்கிலத்தில் பாடிய எம்மா ஹீஸ்டர்ஸ்: வீடியோ வைரல்
2022-02-09@ 00:12:03

கிரவன்போல்டர்: புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீவள்ளி’என்ற பாடலை எம்மா ஹீஸ்டர்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பாடியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, சமந்தா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம் பெரிய வெற்றிபெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி, வெளிநாட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தவகையில், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்றான ‘வள்ளி’ என்ற பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உலக அளவில் புகழ்பெற்ற டச்சு பாடகியான எம்மா ஹீஸ்டர்ஸ் பாடியுள்ளார்.
இந்தப் பாடலின் வீடியோவை, புஷ்பா படத்தின் இசை அமைப்பாளர் தேவி பிரசாத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வௌியான சில மணி நேரத்தில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துவிட்டனர். எம்மா ஹீஸ்டர்ஸின் அழகிய குரலில் ‘வள்ளி’ஆங்கிலப் பாடல் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்து வருகிறது.
மேலும் செய்திகள்
சீனாவில் புதிய வைரஸ் லங்யா: 35 பேர் பாதிப்பு
இலங்கை, பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் வலையில் சிக்கியது நேபாளம்: ரூ.1,500 கோடி கடன் உதவி
22ஏ சட்டத் திருத்தத்தில் மாற்றம் பிரதமர், அமைச்சர்களை அதிபரால் நீக்க முடியாது: இலங்கை அமைச்சர் தகவல்
சீன தூதரை அழைத்து இங்கிலாந்து கண்டிப்பு
நீல வில்லை விருது நவ்ரோஜியின் லண்டன் வீட்டுக்கு சிறப்பு கவுரவம்
இந்திய தீர்மானத்துக்கு சீனா முட்டுக்கட்டை
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!