ஒலிம்பிக் தீபத்துடன் சீனப் பெருஞ்சுவரில் ஓடிய ஜாக்கிசான்
2022-02-05@ 00:08:10

பீஜிங்: சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் போட்டிகள் வரும் 6ம் தேதி துவங்கி, பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா பாதிப்புக்கு நடுவே இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக பீஜிங்கில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு நடத்தப்படும் தீபத் தொடர் ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 67 வயதான நடிகர் ஜாக்கிசானும் கலந்துகொண்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் ஜாக்கிசான் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திக்கொண்டு சீனப் பெருஞ்சுவரின் மீது ஓடிவந்தார். முன்னதாக அந்நாட்டின் கோடைக்கால அரண்மனையில் துவங்கிய இந்த தீபத்தொடர், சீனப்பெருஞ்சுவர் மற்றும் முக்கிய அடையாளச் சின்னங்களை கடந்து செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜாக்கிசானை பார்த்ததும் அங்கு வந்திருந்த ஏராளமான மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜாக்கிசானுடன் அவர்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும் செய்திகள்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்
தொடரும் போர் பதற்றம்: சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் ராணுவம் போர் ஒத்திகை..!
வங்கதேசத்தில் பெட்ரோல் விலை 51% அதிகரிப்பு
இந்திய கடல் எல்லையில் அத்துமீறிய பாக். போர் கப்பல் துரத்தி அடிப்பு
3 நாள் சண்டை ஓய்ந்தது; காசா முனையில் போர் நிறுத்தம்
போதைப் பொருள், துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலி: 650 சிறார்களின் ஆடைகளை கழற்றி சோதனை: இங்கிலாந்து போலீஸ் மீது ஆணையம் புகார்..!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!