பூண்டி ஊராட்சியில் 575 தொகுப்பு வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ஆணை: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
2022-01-31@ 01:08:59

திருவள்ளூர்: பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 575 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகளை கட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் பி.வெங்கட்ரமணா தலைமை வகித்தார். ஒன்றியக் குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, சித்ரா பெர்னாண்டோ, மேலாளர் (நிர்வாகம்) பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பூண்டி, நெய்வேலி, கைவண்டூர், அல்லிக்குழி, சென்றயான்பாளையம், பட்டரைபெருமந்தூர், மோவூர் உள்பட 23 ஊராட்சிகளில் 575 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி (எ) அன்பரசு, மாவட்ட இளைஞரணி தலைவர் தா.மோதிலால், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மஞ்சு லிங்கேஸ், ரெஜிலா மோசஸ், சுபாஷினி பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்யநாராயணன், சித்ரா ரமேஷ், அருணா யுவராஜ், கருணாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சி. திருவள்ளூர், செங்கல்பட்டு கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றினர்
உசிலம்பட்டி அருகே ஒரு மிலிட்டரி கிராமம்; நாட்டை காக்க வீட்டிற்கு ஒரு ராணுவ வீரர்: தலைமுறை தலைமுறையாக தொடரும் வீரவரலாறு
பொதுமக்களை கவரும் வகையில் சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்படங்கள்
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; ஜலகாம்பாறை பகுதியில் இருந்து மரம் வெட்டி கடத்தல்: கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு உயர்வு
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: நின்றபடி பைக் ஓட்டி வாலிபர் சாகசம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!