SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

திருத்தணி, ஊத்துக்கோட்டையில் முதல் நாளில் யாரும் மனு அளிக்கவில்லை

2022-01-29@ 02:42:58

திருத்தணி: திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டையில் முதல் நாளான ேநற்று ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் மொத்தம் 42 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 18,070 ஆண்கள், 19393 பெண்கள், 8 இதரர் என மொத்தம் 37471 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலராக ராமஜெயம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 17 வார்டுகளுக்கு முரளி, 814 வார்டுகளுக்கு மணி மற்றும் 1521 வார்டுகளுக்கு பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வேட்பு மனு தாக்கல் நகராட்சி அலுவலகத்தில் துவங்கியது. ஆனால் நேற்று மாலை வரை திமுக, அதிமுக உள்பட பிற கட்சி வேட்பாளர்கள் என யாரும் முதல் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இதனால் நகராட்சி அலுவலகம் கூட்ட நெரிசலின்றி வெறிச்சோடி கிடந்தது. ஊத்துக்கோட்டை: இதேபோல், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், ஆண் வாக்காளர்கள் 5,003 பேரும், பெண் வாக்காளர்கள் 5,459 பேரும், இதர வாக்காளர் 1 என மொத்தம் 10,463 வாக்காளர்கள் உள்ளனர்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பொது வார்டு 6, ஆதிதிராவிடர் பெண் 1, ஆதிதிராவிடர் பொது 1, பெண்கள் மட்டும் 7 என மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அங்கும் கூட்ட நெரிசலின்றி காணப்பட்டது. திங்கட்கிழமை அமாவாசை என்பதால் அன்று வேட்பு மனு தாக்கல் செய்வது சூடுபிடிக்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்