மதுராந்தகம் நகராட்சியில் முதல்நாளில் ஒரேவொரு வேட்பாளர் மனுத்தாக்கல்
2022-01-29@ 02:05:59

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள், மறைமலைநகர், செங்கல்பட்டு, மதுராந்தகம், கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகளில் 108 வார்டுகள், மாமல்லபுரம், திருப்போரூர், இடைக்கழிநாடு, அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், கருங்குழி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள 99 வார்டுகள் என மொத்தம் 277 பதவிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு இயந்திரங்கள் தயார் படுத்தப்படுகிறது.
வேட்புமனு தாக்கல், நேற்று துவங்கியது. இதையொட்டி, வேட்புமனுக்களை அரசியல் கட்சியினர் ஆர்வமாக பெற்று சென்றனர். முதல் நாளான நேற்று மதுராந்தகம் நகராட்சியில், கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று 2வது நாள் என்பதால் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்யக்கூடும் என கருதப்படுகிறது. இதையொட்டி, அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் செய்திகள்
இந்தியால 2 பெரிய அக்யூஸ்ட் இருக்காங்க ஒன்று பிரதமர் மோடி இன்னொன்று அமித்ஷா: பாஜ ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி பரபரப்பு பேச்சு
ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை மருது அழகுராஜா அவமானப்படுத்துகிறார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
கொட நாடு வழக்கை வேகமாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை வெளிப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் திடீர் கோரிக்கை
சென்னையில் 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது: வி.கே.சசிகலா பேச்சு
பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுவோம்: சிவசேனா எச்சரிக்கை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!