கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை: அடுக்குமாடி வீட்டில் தூக்கில் தொங்கினார்
2022-01-29@ 00:34:28

பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகள் வழி பேத்தி டாக்டர் சவுந்தர்யா (30) பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டத பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 2வது மகள் பத்மா. இவரின் கணவர் சிவகுமார். இவர்களின் மகள் டாக்டர் சவுந்தர்யாவுக்கும் (30), டாக்டர் நீராஜிக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். இவர்கள் பெங்களூரு வசந்த நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்ைத உள்ளது. இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு நீராஜ் பணிக்கு சென்று விட்டார். வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சவுந்தர்யாவுக்கு காலை உணவு கொடுப்பதற்காக அவர் தங்கி இருந்த அறையின் கதவு தட்டியபோது எந்த பதிலும் வரவில்லை. உடனே, நீராஜிக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். அவர் அவசர அவசரமாக வந்து காலை 10.30 மணிக்கு கதவு தட்டியும் எந்த பயனுமில்லை. கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு சவுந்தர்யா சடலமாக தொங்கினார்.
இது குறித்து ஐகிரவுண்ட் ேபாலீஸ் நிலையத்திற்கு நீராஜ் தகவல் கொடுத்தார். போலீசார் வந்து சவுந்தர்யாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சவுந்தர்யாவின் கழுத்தில் மட்டும் சிறிய காயம் இருப்பதாகவும், வேறு எந்த இடத்திலும் காயம் உள்பட எந்த அடையாளமும் இல்லை என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் சதீஷ் தெரிவித்தார். பின்னர். பெங்களூரு வடக்கு தாலுகா, அப்பிகெரேவில் உள்ள நீராஜ் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. மாலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சவுந்தர்யாவின் உடலை பார்த்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்ணீர் விட்டு கதறி அழுதார். சவுந்தர்யா எதற்காக கை குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இந்த தற்்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.
மேலும் செய்திகள்
உதய்பூரில் தையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதற்கும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்பு : திடுக்கிடும் தகவல்!!
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆந்திரப்பிரதேசத்தில் வரும் 4ம் தேதி விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கம் : உத்தவ் தாக்கரே அதிரடி
தோண்ட தோண்ட சடலம்.. மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி... உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 நிதியுதவி அறிவிப்பு!!
அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்