SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்

2022-01-29@ 00:31:03

* ஆஸி. ஓபன் அரையிறுதியில் தன்னுடன் மோதிய சிட்சிபாஸ் அவரது தந்தையும் பயிற்சியாளருமான அபோஸ்தலோசிடம் ஆலோசனைகள் பெற்றதால் கடுப்பான மெட்வதேவ், இதை நடுவர் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டி வாக்குவாதம் செய்ததுடன் ‘சின்ன பூனை’ என்று அழைத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

* மெல்போர்னில் நேற்று நடந்த பிக் பாஷ் லீக் டி20 தொடரின் பைனலில் சிட்னி சிக்சர்ஸ் அணியை 79 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 4வது முறையாக பிபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன் (கேப்டன் டர்னர் 54, லாவ்ரி எவன்ஸ் 76*). சிட்னி சிக்சர்ஸ் 16.2 ஓவரில் 92 ரன்னுக்கு ஆல் அவுட் (டேனியல் ஹியூஸ் 42).

*  ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் தொடரின் காலிறுதியில் இன்று வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்குகிறது. கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கேப்டன் யஷ் துல், துணை கேப்டன் ஷேக் ரஷீத் உள்பட 6 வீரர்களும் குணமாகி விளையாடத் தயாராகி உள்ளனர்.

*  ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் பிப். 12, 13 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தேர்வு குறித்து ஆலோசிப்பதற்காக கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்துள்ளார்.

* நியூசிலாந்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும், மார்ச் 4 முதல் அங்கு நடைபெற உள்ள மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான அட்டவணை மற்றும் மைதானங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று ஐசிசி அறிவித்துள்ளது.

* புரோ கபடி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியுடன் மோதிய பாட்னா பைரேட்ஸ் அணி 52-24 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்