ரஞ்சி கோப்பை தொடர் 2 கட்டமாக நடத்த பிசிசிஐ திட்டம்: செயலர் ஜெய்ஷா தகவல்
2022-01-29@ 00:29:58

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரை 2 கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 சீசன்களாக ரஞ்சி கோப்பை தொடர் நடைபெறாத நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடந்த பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில், ரஞ்சி போட்டியை நடத்த வேண்டும் என்று மாநில சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், ரஞ்சி போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது: இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரை 2 கட்டங்களாக நடத்த வாரியம் முடிவு செய்துள்ளது.
முதல் கட்டத்தில் லீக் ஆட்டங்களையும், ஜூன் மாதத்தில் நாக் அவுட் ஆட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். கொரோனாவால் வீரர்கள் உட்பட யாரும் பாதிக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எங்கள் குழு தீவிர ஆலோசனையில் இருக்கிறது. அதே நேரத்தில் ரஞ்சி போட்டியை நடத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம். காரணம் ரஞ்சி கோப்பை நாட்டின் மதிப்பு மிக்க உள்நாட்டு போட்டியாகும். இந்தப்போட்டி ஆண்டுதோறும் மிகத் திறமையான வீரர்களை அடையாளம் காட்டி வருகிறது. எனவே இந்த முக்கிய போட்டியை கட்டாயம் நடத்துவோம். இவ்வாறு ஜெய்ஷா கூறியுள்ளார்.
அதன் மூலம் ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரஞ்சி போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் நடத்தப்படும். மே மாதம் ஐபிஎல் முடிந்ததும் ஜூன் மாதத்தில் ரஞ்சி போட்டியின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது. அதற்கேற்ப போட்டி அட்டவணையும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா
மாஸ்டர்ஸ் மகளிர் உலக கோப்பை: இங்கிலாந்து செல்லும் இந்திய ஹாக்கி அணி
வங்கதேசத்துடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
இந்தியாவுடன் 5வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 378 ரன் இலக்கு
ஷபாலி - மந்தனா அதிரடி ஆட்டம்: தொடரை வென்றது இந்தியா
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி.20 போட்டி 35 ரன் வித்தியாசத்தில் வெ.இண்டீஸ் வெற்றி
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!