ரூ2,800 கோடிக்கு ஒப்பந்தம்: இந்தியாவிடம் பிரம்மோஸ் வாங்குகிறது பிலிப்பைன்ஸ்
2022-01-29@ 00:17:45

புதுடெல்லி, ஜன. 29: இந்தியாவிடம் இருந்து ரூ.2,800 கோடிக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்தியா-ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. சூப்பர்சோனிக் ரகத்தை சேர்ந்த இதை, கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், விமானம் அல்லது நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்திய - சீன எல்லை பகுதிகளான லடாக், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இந்த ஏவுகணைகள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணையை வாங்குவதற்கு, அண்டை நாடான பிலிப்பைன்ஸ் ஆர்வம் காட்டியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், பிலிப்பைன்சுக்கு ரூ.2,800 கோடிக்கு இந்த ஏவுகணையை விற்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிலத்தில் இருந்து போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்சுக்கு விற்க, ஒப்பந்தமாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி கொள்கைக்கு புதிய உத்வேகம் கிடைக்கும்,’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உதய்பூரில் தையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதற்கும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்பு : திடுக்கிடும் தகவல்!!
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆந்திரப்பிரதேசத்தில் வரும் 4ம் தேதி விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கம் : உத்தவ் தாக்கரே அதிரடி
தோண்ட தோண்ட சடலம்.. மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி... உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 நிதியுதவி அறிவிப்பு!!
அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்