இந்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் .!
2022-01-28@ 21:43:49

டெல்லி: இந்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு விரைவில் புதிய மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரை நியமிக்க உள்ளதாகவும், தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) டாக்டர் ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாசசூசெஸ்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆனந்த நாகேஸ்வரன். 2019-2021 ஆண்டுக்கான பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் பகுதி நேர உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1994 மற்றும் 2011 க்கு இடையில் சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல தனியார் செல்வ மேலாண்மை நிறுவனங்களுக்கு மேக்ரோ-பொருளாதார மற்றும் மூலதன சந்தை ஆராய்ச்சியில் பல தலைமைப் பாத்திரங்களை அவர் வகித்துள்ளார். பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா சர்ச்சை கருத்து; பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி கருத்து
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு: போலீஸ் குவிப்பால் பதற்றம்
இருதரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி போனில் பேச்சு
பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளை சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தி ஸ்டார்ட் அப் அசத்தல்: விண்வெளி துறையில் புதிய மைல்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நாட்டை தீக்கிரையாக்கி விட்டார்: நுபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
என்னை காதலித்தவர்கள் ஓடிப்போனது ஏன்? சுஷ்மிதா சென் பதில்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்